அருணாச்சலத்தில் துப்பாக்கிச் சூடு - எம்.எல்.ஏ உட்பட 7 பேர் உயிரிழப்பு

அருணாச்சலத்தில் துப்பாக்கிச் சூடு - எம்.எல்.ஏ உட்பட 7 பேர் உயிரிழப்பு
அருணாச்சலத்தில் துப்பாக்கிச் சூடு - எம்.எல்.ஏ உட்பட 7 பேர் உயிரிழப்பு
Published on

அருணாச்சலப் பிரதேசத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு எம்.எல்.ஏ உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். 

அருணாச்சலப் பிரதேசத்தின் திரப் மாவட்டத்திலுள்ள போகபானி என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் தேசிய மக்கள் கட்சியின் நடப்பு எம்.எல்.ஏவும், வேட்பாளருமான திரோங் அபாஹ் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சில் அமைப்பு (NSCN-IM) இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு மேகாலய முதலமைச்சர் காங்ரட் சங்மா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய ட்விட்டரில், “எம்.எல்.ஏ திராங் அபோஹ் இறந்த செய்தி அறிந்து தேசிய மக்கள் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது. இது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூர தாக்குதலை கண்டிக்கிறோம். இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு ராஜ்நாத் சிங் மற்றும் பிரதமர் அலுவலகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் அருணாச்சலப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த மார்ச் 29ம் தேதி அக்கட்சியின் ஆதரவாளர் ஒருவர் அடையாளம் தெரியாதவர்களால் திரங் மாவட்டத்தில் அடித்துக் கொல்லப்பட்டார்.

அருணாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைந்து வாக்குப் பதிவு நடைபெற்றது. தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் வேட்பாளரும் நடப்பு எம்.எல்.ஏவும் ஆன அபோஹ் கொல்லப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com