வரி செலுத்துவோர் செய்யும் தியாகத்தைப் போல, வங்கிகள் நம்பகத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற யூகோ வங்கியின் நிகழ்ச்சியில் பேசிய ஜேட்லி, வரி செலுத்துவோர் செய்யும் தியாகத்தைப் போல, வங்கிகள் நம்பகத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். வரி செலுத்துவோரின் பணத்தை வங்கிகளின் மூலதமான அரசு அளிப்பதாகக் கூறிய அவர், அதற்கேற்ப வங்கிகள் சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற நாட்டின் அடிப்படை பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும் என்றும், உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் வேகமாக வளரும் பொருளாதார நாடாகவும் இந்தியா விளங்குவதாக அவர் குறிப்பிட்டார்.