மாற்றுத் திறனாளிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட செயற்கை கால்- இஸ்ரோ வடிவமைப்பு

மாற்றுத் திறனாளிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட செயற்கை கால்- இஸ்ரோ வடிவமைப்பு
மாற்றுத் திறனாளிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட செயற்கை கால்- இஸ்ரோ வடிவமைப்பு
Published on

மாற்றுத் திறனாளிகளுக்கு மைக்ரோசிப் பொருத்தப்பட்ட செயற்கை காலை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

பல்வேறு ஏஜென்சிகளின் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கை காலை வணிக ரீதியாக தயாரிக்க முடிந்தால், தற்போதைய செலவில் பதினொன்றில் ஒரு பங்குக்கு விற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் வடிவமைக்கப்பட்ட செயற்கைக் காலைப் பயன்படுத்தி, மாற்றுத் திறனாளி ஒருவர் 100 மீட்டர் தூரம் சிரமமின்றி நடக்க முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது செயற்கை காலை தயாரிக்க 10 முதல் 60 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் இஸ்ரோ உருவாக்கிய செயற்கை கால்களை வணிக ரீதியாக தயாரிப்பதன் மூலம் நான்கு முதல் ஐந்து லட்சம் வரை விற்பனை செய்ய முடியும் என தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com