20 நிமிடங்கள் முன்பு பயணிகள் வர ஏற்பாடு - ரயில்வே புது திட்டம்

20 நிமிடங்கள் முன்பு பயணிகள் வர ஏற்பாடு - ரயில்வே புது திட்டம்
20 நிமிடங்கள் முன்பு பயணிகள் வர ஏற்பாடு - ரயில்வே புது திட்டம்
Published on

ரயில் புறப்படும் நேரத்திற்கு கிட்டத்தட்ட 15 முதல் 20 நிமிடங்கள் முன்னதாகவே இனி நீங்கள் ரயில் நிலையத்திற்குச் செல்ல வேண்டும்.

தற்போது விமானத்தில் பயணிக்க வேண்டும் என்றால் விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் முன்னதாகவே நீங்கள் விமான நிலையம் செல்ல வேண்டும். அதன்பின் உங்களிடம் பரிசோதனை நடைபெறும். நீங்கள் கொண்டு செல்லும் பொருட்களையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்வார்கள். பரிசோதனை அனைத்தும் முடிவடைந்த பின்னர்தான் நீங்கள் விமானத்தில் பறக்க இயலும்.

தற்போது இதேபோன்ற முறையை ரயில் நிலையங்களிலும் கொண்டுவர ரயில்வே திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை கொண்டு இந்திய ரயில்வே இதனை கொண்டுவர உள்ளது. இதன் காரணமாக ரயில் புறப்படும் நேரத்திற்கு 15 முதல் 20 நிமிடங்கள் முன்னதாகவே நீங்கள் ரயில் நிலையத்தை சென்றடைய வேண்டும். அதன்பின் சோதனை நடைபெறும். அதற்கு பிறகுதான் நீங்கள் பதிவு செய்த ரயிலில் பயணிக்க முடியும்.

இந்த மாதம் கும்பமேளா தொடங்க உள்ள நிலையில் அலகாபாத்தில் இந்த முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நாட்டில் உள்ள 202 ரயில் நிலையங்களில் இந்த முறையை அமல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரயில் நிலையத்தின் அனைத்து வழிகளிலும் சோதனை உபகரணங்கள் இடம்பெற்றிருக்கும். இதுவே பயணிகளை சோதனை செய்யும் எனத் தெரிகிறது. இருப்பினும் விமான நிலையங்களை போல சுமார் 1 மணி நேரத்திற்கு முன்னதாக வர தேவையில்லை. சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் முன்னதாக ரயில்வே நிலையத்தை வந்தடைந்தால் போதும். இந்த முறையை அமல்படுத்தும்போது அதிகப்படியான பாதுகாப்பு இருக்கும். அதேசமயம் பாதுகாப்பு ஊழியர்கள் குறைவாகவே இருந்தாலும் போதும் என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com