சமூக செயற்பாட்டாளர் திஷா ரவி கைது

சமூக செயற்பாட்டாளர் திஷா ரவி கைது
சமூக செயற்பாட்டாளர் திஷா ரவி கைது
Published on

உலகின் பிரபலமான இளம் சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க்கின் "எதிர்காலத்திற்கான வெள்ளிக்கிழமை (Friday for future)" பரப்புரையின் நிறுவனர்களில் ஒருவரான திஷா ரவியை, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக குரல்கொடுக்க “டூல்கிட்” வழங்கியதற்காக டெல்லி காவல்துறை கைது செய்தது.

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக குரல்கொடுத்த இளம் சுற்றுச்சூழல் காலநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் மற்றும் பலர் ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட "டூல்கிட்" தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த 22 வயது காலநிலை ஆர்வலர் திஷா ரவி டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திஷா ரவி "எதிர்காலத்திற்கான வெள்ளிக்கிழமை (Friday for future)" பரப்புரையின் நிறுவனர்களில் ஒருவர். அவர்தான் இந்த கருவித்தொகுப்பைத் திருத்தி அதை முன்னோக்கி அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பெங்களூரு நகரத்தின் சிறந்த மகளிர் கல்லூரிகளில் ஒன்றான மவுண்ட் கார்மல் கல்லூரியில் படிக்கும் இந்த மாணவி நேற்று மாலை கைது செய்யப்பட்டு டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.

பிப்ரவரி 4-ம் தேதி, ஸ்வீடன் காலநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் செய்த ட்வீட், குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது ஏற்பட்ட குழப்பம் மற்றும் வன்முறைக்குப் பின்னர் உலகளாவிய கவனத்தை ஈர்க்க உதவியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com