2020-21 ல் பிஎம்ஜேஜேபிஒய் காப்பீட்டின் கீழ் இறப்புகளுக்காக ரூ.4,700 கோடி வழங்கல்

2020-21 ல் பிஎம்ஜேஜேபிஒய் காப்பீட்டின் கீழ் இறப்புகளுக்காக ரூ.4,700 கோடி வழங்கல்
2020-21 ல் பிஎம்ஜேஜேபிஒய் காப்பீட்டின் கீழ் இறப்புகளுக்காக ரூ.4,700 கோடி வழங்கல்
Published on

கடந்த 2020-21 ஆம் நிதியாண்டில் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனாவின் (பி.எம்.ஜே.ஜே.பி.ஒய்) கீழ் தாக்கல் செய்யப்பட்ட 2,50,351க்கும் மேற்பட்ட இறப்புகளுக்காக சுமார் 4,700 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் நிதிச் சேவைத் துறை வழங்கிய, பி.எம்.ஜே.ஜே.பீ.யின் கீழ் பதிவான இறப்புக் கோரிக்கைகளுக்காக வழங்கப்பட்ட நிதி தொடர்பான தகவல்களில் இறப்புகளுக்கான காரணம் குறிப்பிடப்படவில்லை.

இதன்படி, கடந்த 2020-21ஆம் நிதியாண்டில் பி.எம்.ஜே.ஜே.பி.ஒய்-ன் கீழ் 2,34,905 இறப்புக் கோரிக்கைகளுக்காக ரூ.4,698.10 கோடி செலுத்தப்பட்டுள்ளது . இந்த நிதியாண்டில் பி.எம்.ஜே.ஜே.பி.ஒய்-ன் கீழ் 2,50,351 இறப்புக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன, அவற்றில் 13,100 தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 2,346 கோரிக்கைகள் ஆராயப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.

பி.எம்.ஜே.ஜே.பி.ஒய்-ன் கீழ், 2019-20 ஆம் நிதியாண்டில் 1,78,189 இறப்புகளுக்கு 3,563.78 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. 2018-19ல் 1,35,212 இறப்புகளுக்கு 2,704.24 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. பி.எம்.ஜே.ஜே.பி.ஒய்-ன் கீழ், 18 முதல் 50 வயது வரை வங்கிக் கணக்கு உள்ள ஒருவர், ஆண்டுக்கு 330 ரூபாய் பிரீமியம் செலுத்துவதன் மூலம் காப்பீடு செய்யலாம். இந்தத் திட்டம் மூலம் 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com