முடிவுக்கு வந்த 43 மணி நேர போராட்டம் - மலையிடுக்கில் சிக்கிய கேரள இளைஞர் மீட்பு

முடிவுக்கு வந்த 43 மணி நேர போராட்டம் - மலையிடுக்கில் சிக்கிய கேரள இளைஞர் மீட்பு
முடிவுக்கு வந்த 43 மணி நேர போராட்டம் -   மலையிடுக்கில் சிக்கிய கேரள இளைஞர் மீட்பு
Published on

கேரளாவின் 'மலம்புழா' மலையேறுவதில் ஆர்வம் கொண்டவரான 23 வயது இளைஞர் பாபு, 2 தினங்களுக்கு முன்னர் குரும்பாச்சி மலையிடுக்கில் சிக்கியிருந்தார். கேரள அரசு மற்றும் இந்திய ராணுவத்தின் சீறிய முயற்சியின் மூலம் அவர் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த திங்கள்கிழமை அன்று பாபுவும், அவரது மூன்று நண்பர்களும் குரும்பாச்சி மலைக்கு சென்றுள்ளனர். மலையேற்றத்தின்போது நடுவழியில் கால் இடறியதில் பாபு, உருண்டு விழுந்து மலை இடுக்கில் இருந்த சிறிய குகையில் சிக்கிக் கொண்டார். இதில் அவரது கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், மலையின் மேல் பகுதிக்கு சென்று கயிறு மூலம் அவரை மீட்க முயன்றனர். ஆனால், அவர் விழுந்த பகுதி சரியாக தென்படாததால் கீழே இறங்கி வந்து பார்த்தனர்.

அப்போது தான் பார்வைக்கு புலப்படாத இடுக்கில் அவர் சிக்கிக் கொண்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த தீயணைப்புப் படையினர் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இடுக்கு பகுதி என்பதால் கடற்படையின் ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் முயற்சியும் தோல்வி அடைந்தது. உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வரும் பாபுவை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வரும் சூழலில், கேரள முதல்வர் பினராயி விஜயன் ராணுவத்தின் உதவியை நாடினார்.

இதையடுத்து பெங்களூருவில் இருந்து ஒரு பிரிவினரும், தமிழகத்தின் வெலிங்டனில் இருந்து ஒரு பிரிவினரும் குரும்பாச்சி மலைக்கு புறப்பட்டனர். அவர்கள் சீறிய முயற்சியினால் தற்போது பாபு என்ற அந்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com