ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி எரிந்து விழுந்ததில் 4 உடல்கள் முழுவதும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
முக்கிய ஆலோசனைக்கூட்டத்திற்காக பல உயர் ராணுவ அதிகாரிகள் சென்றதாகக் கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி எரிந்து விழுந்ததில் 4 உடல்கள் முழுவதும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எஞ்சியவர்களை மீட்பதற்காக பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமைத்தளபதி பிபின் ராவத் பயணித்ததாக ராணுவ வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது. அவருடைய மனைவியும் உடன்சென்றதாகக் கூறப்படுகிறது. உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவிற்கு எரிந்துள்ளதால் பிபின் ராவத்தின் நிலை என்னவென்று தெரியவில்லை.