எல்லைப் பாதுகாப்பு படையில் ஏதேனும் பிரச்னை எனில் தன்னிடம் நேரடியாகச் சொல்லலாம் எனவும் சமூக வலைதளங்களில் அதுகுறித்து வீடியோக்களை பதிவிடுவது வேண்டாம் எனவும் ராணுவ வீரர்களை ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத் கேட்டுக்கொண்டுள்ளார்.
எல்லைப் பாதுகாப்பு படையில் உணவு மிக மோசமாக வழங்கப்படுவதாகவும், சில நேரங்களில் வெறும் வயிற்றோடு படுக்கச் செல்வதாகவும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் தேத் பதூர் யாதவ் குற்றம்சாட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.
இதுகுறித்து ராணுவத் தளபதி பிபின் ராவத் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவை அழிக்க பல நாடுகள் சதி திட்டம் தீட்டி வருகின்றன. அவற்றிலிருந்து நம் நாட்டை பாதுகாக்கவே எல்லையில் வீரர்கள் பாடுபடுகின்றனர் என்று தெரிவித்தார். ராணுவ வீரர்கள் உணவு குறித்தோ அல்லது வேறு ஏதாவது புகார்களையோ கூற விரும்பினால் தன்னிடம் நேரிடையாக கூறலாம் எனவும் சமூக ஊடங்கங்களில் பதிவிட்டு பிரச்சினைகளை பொது மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். ராணுவத்தின் தலைமை அலுவலகத்தில் புகார் பெட்டி வைக்கப்படும். அதில் உங்கள் குறைகளை எழுதி போடுங்கள். அவற்றுக்கு நாங்கள் தீர்வு காணுகிறோம் என பிபின் ராவத் கூறினார்.