உத்தராகண்ட்: புதையுண்ட கிராமத்தை கண்டுபிடிக்க தொல்லியல்துறை தீவிரம்... ராமகங்காவில் மீண்டும் ஆய்வு!

உத்தராகண்ட் மாநிலத்தில் அல்மோரா கிராமத்தில் தொல்பொருள் ஆய்வு நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
உத்தராகண்ட்
உத்தராகண்ட்ட்விட்டர்
Published on

இன்றைய இந்தியாவில் பண்டையகாலத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கைமுறை மற்றும் வாழ்வாதாரங்களை தெரிந்துகொள்ளும் விதமாக நாடு முழுவதும் பல இடங்களில் தொல்பொருள் ஆய்வாளார்கள் தங்களின் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் கீழடி, ஆதிச்சநல்லூரில் போன்ற இடங்களில் அகழ்வாராய்சிகள் நடைபெற்றன. அதன்மூலம் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த பண்டைய தமிழர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் போன்றவை கிடைக்கப்பெற்றன. குறிப்பாக கீழடி அகழாய்வின் மூலம் சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன்பு வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

கீழடி
கீழடி

அதே போல், உத்தராகண்ட் மாநிலத்தில் அல்மோரா மாவட்டத்தில் டெஹ்ராடூன் அருகே உள்ள ராமகங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ள கெவாட் பள்ளத்தாக்கில் புராதன நகரம் ஒன்று மண்ணுக்குள் புதைந்து இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையான ஏ.எஸ்.ஐ அப்பகுதியில் அகழாய்வு பணிகளை செய்யத்தொடங்கியுள்ளது.

உத்தராகண்ட்
உத்தராகண்ட்: மீட்கப்பட்ட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு

இப்பகுதியில் அகழ்வாராய்சி குழு ஏற்கெனவே ஆய்வு செய்துள்ளது. அந்த ஆய்வறிக்கையின் படி, ‘கெவாட் பள்ளத்தாக்கின் அடியில் ஒரு பழங்கால நகரம் இருக்கிறது. ராமகங்கை கரையில் 10 கிலோ மீட்டர் அளவிற்கு சமதளமான நிலம் உள்ள பகுதியில், 9 மற்றும் 10 நூற்றாண்டுக்கு முற்பட்ட பழங்கால கோவில்கள் இருக்கின்றன. இந்த வகை கோவில்கள் கட்யூரி ஆட்சியாளார்களால் கட்டப்பட்டவை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கும் முன்பு கட்டப்பட்ட இக்கோவில்களை அடிப்படையாக வைத்தே, இங்கு ஒரு ஆற்றங்கரை நாகரீகம் இருந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளார்கள் கூறுகின்றனர்.

முன்னதாக, 1990ல் கர்வார் பல்கழைக்கழகத்தினர் ஒரு ஆய்வை மேற்கொண்டிருந்தனர். அதன்படி, “இப்பகுதியில் ஒரு சிறிய பிள்ளையார் கோவிலும், மேலும் சிறிய கோயில்கள் சுமார் ஒன்று முதல் இரண்டடி வரையும் இருக்கின்றன” என உறுதிசெய்யப்பட்டது.

இந்த ஆராய்ச்சியின் முடிவை அடிப்படையாக கொண்டே,1993-ம் ஆண்டு தொல்லியல் துறை ஆய்வு தொடர்ந்தது. அதில் இங்கு, புதைகுழிகளும், அறைகள் மற்றும் இறந்தவர்களின் எச்சங்கள் வைக்கப்பட்டிருந்த ஜாடிகள் ஆகியவை கிடைக்கப் பெற்றன. இந்த கண்டுபிடிப்புகளும், ‘இங்கு ஒரு நாகரீகம் இருந்திருக்கவேண்டும்; அது மண்ணுக்குள் புதையுண்டிருக்க வேண்டும்’ என்பதற்கான சான்றாக அமைந்தன. தற்போது இந்த அனைத்தையும் அடிப்படையாக வைத்து, மீண்டும் இப்பகுதியில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com