இந்திய கடற்படைக்கு புதிதாக 3 கப்பல்கள் - பாதுகாப்புத்துறை கூட்டத்தில் முடிவு

இந்திய கடற்படைக்கு புதிதாக 3 கப்பல்கள் - பாதுகாப்புத்துறை கூட்டத்தில் முடிவு
இந்திய கடற்படைக்கு புதிதாக 3 கப்பல்கள் - பாதுகாப்புத்துறை கூட்டத்தில் முடிவு
Published on

2700 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலமையில் பாதுகாப்பு உபகரணங்கள் கையாளும் குழுவின் (Defence Acquisition Council) கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 2700 கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய கடற்படைக்கு புதிதாக 3 பயிற்சி கப்பல்கள் வாங்க முடிவு எடுக்கபட்டுள்ளன.

அந்தக் கப்பல்கள் அனைத்தும் கடற்படை வீரர்களுக்கு பயிற்சியளிக்க உதவும் வகையில் வாங்கப்படவுள்ளது. அத்துடன் இந்தக் கப்பல்கள் பெண் கடற்படை வீராங்கனைகளுக்கும் பயிற்சியளிக்கும் வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் புதிய பயிற்சி கப்பல்கள் மருத்துவமனை வசதி, பேரிடர் மீட்பு மற்றும் தெடுதல் பணிகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்தும் வகையில் அமையும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com