கல்லறையைத் தோண்டி தற்கொலைக்கு முயன்ற ஆந்திர முதியவர்

கல்லறையைத் தோண்டி தற்கொலைக்கு முயன்ற ஆந்திர முதியவர்
கல்லறையைத் தோண்டி தற்கொலைக்கு முயன்ற ஆந்திர முதியவர்
Published on

கடவுள் தன்னை அழைத்துவிட்டதாக கூறிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்ற முதியவரை தடுத்து நிறுத்தி போலீசார் அறிவுரை வழங்கினர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் குன்றூர் பகுதியை சேர்ந்தவர் லெட்சிரெட்டி. 70 வயது முதியவர். இவர் இறந்தபின்பு தனது உடலை அடக்கம் செய்வதற்கான கல்லறையை தன் கைகளால் தோண்டியுள்ளார். பின்னர் கடவுள் தன்னை அழைத்துவிட்டதாக கூறிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் போலீசார் துரித கதியில் ஈடுபட்டு அவரை மீட்டனர்.

முன்னதாக லெட்சி ரெட்டி மாவட்ட ஆட்சியருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் தனது உயிரை மாய்த்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார். மேலும் அதற்கான தனது எண்ணத்தையும் வெளிப்படுத்தி இதன்மூலம் தனது குடும்பத்தினருக்கு எந்தவித பிரச்னையும் ஏற்பட்டுவிடக் கூடாது எனக் கேட்டிருந்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து அப்பகுதில் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததோடு உடடினயாக அவரை மீட்குமாறும் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லெட்சி ரெட்டியை மீட்டனர்.

லெட்சி ரெட்டியின் மனைவி சமீபத்தில்தான் இறந்துள்ளார். இதுகுறித்து அவர் போலீசாரிடம் தெரிவிக்கும்போது, தன்னை எரித்துக்கொண்டு கடவுளிடம் சென்றடைய உள்ளதாக தெரிவித்துள்ளார். தனது மகன் மற்றும் பேரக்குழந்தை வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டதால் இனி தனக்கு வாழ்க்கையில் ஒன்றும் இல்லை என்பதால் கடவுளிடம் செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார். அதன்பின் போலீசார் அவருக்கு மனநல ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். இதனையடுத்து இனிமேல் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடமாட்டேன் என லெட்சி ரெட்டி தெரிவித்திருக்கிறார். எனவே போலீசார் லெட்சி ரெட்டி மீது வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com