“பூமியின் நுரையீரலில் தீ விபத்து ஆபத்தானது”- அனுஷ்கா ஷர்மா..!

“பூமியின் நுரையீரலில் தீ விபத்து ஆபத்தானது”- அனுஷ்கா ஷர்மா..!
“பூமியின் நுரையீரலில் தீ விபத்து ஆபத்தானது”- அனுஷ்கா ஷர்மா..!
Published on

அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீ, மிகவும் ஆபத்தானது என்று பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தெரிவித்துள்ளார். 

உலகத்தின் நுரையீரல் என்று கருதப்படும் அமேசான் காடுகளில் கடந்த 2 வாரங்களாக காட்டுத் தீ எரிந்து வருகிறது. இதனையடுத்து அங்கு இருக்கும் உயிரினங்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றன. அத்துடன் பிரேசில் நாட்டின் பல மாநிலங்களில் காட்டுத் தீயின் புகை பரவி வருகிறது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் #SaveTheAmazon #PrayForTheAmazon என்ற ஹேஷ்டேக்கில் மக்கள் தங்களின் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். 


 
இந்நிலையில் அமேசான் காடுகளில் எரிந்து வரும் தீ குறித்து பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா கருத்து தெரிவித்துள்ளார். அதில், “அமேசான் காடுகள் கடந்த சில வாரங்களாக எரிந்து வருகிறது. இது மிகவும் ஆபத்தான செய்தி. அமேசான் காடுகள் இந்தப் பூமியின் நுரையீரலாக கருதப்படுகிறது. இதில் தற்போது தீ ஏற்பட்டுள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்தச் சம்பவம் உடனடியாக உலக பத்திரிகைகளின் கவனத்தை ஈர்க்கும் என்று நம்புகிறேன். #Saveamazon” எனப் பதிவிட்டுள்ளார். 

இந்தக் காட்டுத் தீ குறித்து பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “அமேசான் காட்டுத் தீ தொடர்பான படங்களை பார்ப்பதற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அங்கு 2 வாரங்களாக காட்டுத் தீ ஏரிந்து வருகிறது. இந்தக் காடுகள் உலகின் 20 சதவிகிதம் ஆக்ஸிஜனை தருகின்றன. எனவே இந்தக் காட்டுத் தீ நம் அனைவரையும் பாதிக்கும். பருவநிலை மாற்றத்தை பூமி தாங்கினாலும் நாம் தாங்க மாட்டோம்” எனப் பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com