லட்சத்தீவில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மேலும் சில விதிமுறைகளை யூனியன் பிரதேச நிர்வாகம் அறிவித்துள்ளது.
கேரளா அருகே அமைந்துள்ள லட்சத்தீவில் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள பிரஃபுல் கோடா படேல் என்ற நிர்வாகி பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். வளர்ச்சி மற்றும் சீர்திருத்தம் என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு விதிமுறைகளுக்கு எதிராக அங்கு போராட்டமும் வெடித்துள்ளது.
இந்நிலையில், மேலும் சில உத்தரவுகளை லட்சத்தீவு நிர்வாகம் பிறப்பித்துள்ளது. இதன்படி, அனைத்து மீன்பிடிப் படகுகளிலும் கண்காணிப்புக்காக அரசு அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் படகு நிறுத்தும் தளங்கள், ஹெலிகாப்டர் தளங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும், குப்பைகளை அறிவியல்பூர்வமாக அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ஃபைசல், புதிய விதிமுறைகளை லட்சத்தீவு நிர்வாகம் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.