பாஜகவில் சேர்ந்துவிட்டதாக வந்த தகவலை பிரபல தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் மறுத்துள்ளார்.
பிரபல தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ். 2003-ம் ஆண்டு பாரிசில் நடந்த உலக தடகள போட்டியில், நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் பரவலாக அறியப்பட்டார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவுக்காக, தங்கப் பதக்கம் வென்றவர். பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்றுள்ள அஞ்சு பாபி ஜார்ஜ் கேரளாவில் வசித்து வருகிறார்.
இவர் கர்நாடகாவில, பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியின்போது அந்த கட்சியில் சேர்ந்துவிட்டதாக நேற்று செய்திகள் வெளி யாயின. ஏ.என்.ஐ உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் புகைப்படத்துடன் இந்த செய்தியை வெளியிட்டன. அந்தப் படத்தில் மத்திய அமைச்சர் முரளிதரன், கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா உட்பட பலர் இருக்கின்றனர். ஆனால், தான் பாஜகவில் சேரவில்லை என்று அஞ்சு ஜார்ஜ் மறுத்துள்ளார். கேரள மாநில பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான முரளிதரனும் மறுத்துள்ளார்.
தனது குடும்ப நண்பரான அஞ்சு ஜார்ஜ், தன்னை பார்ப்பதற்காகவே கர்நாடகாவில் நடந்த விழாவுக்கு வந்தார் என்றும் அப் போது தவறுதலாக அவர் பாஜகவில் சேர்ந்துவிட்டதாக செய்தி வெளியாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.