ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ், ’ஒரு இந்து பயங்கரவாதியாக இருக்கவே முடியாது’ என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை விமர்சித்த அவர், "பாகிஸ்தான் பயங்கரவாதிகளை விட்டு விட்டு, இந்தியக் குடிமகன்களை ‘இந்து பயங்கரவாதிகள்’ என்று முத்திரைக் குத்துவதுதான் அந்தக் கட்சியின் அரசியல் விளையாட்டு" என்று கூறியுள்ளார்.
”இந்து பயங்கரவாதம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. ஓர் இந்து பயங்கரவாதியாக இருக்கவே முடியாது. இந்து பயங்கரவாதம் என்ற சொற்களே அர்த்தமற்றது. ஒரு இந்து பயங்கரவாதியாக இருந்திருந்தால், உலகத்தில் தீவிரவாதமே முடிவுக்கு வந்திருக்கும்” என்றார்.
இதற்கு பதில் அளித்த காங்கிரஸின் திக்விஜய் சிங், ”விஜ் கூறுவது சரியே. ஏனெனில் அது சங்பரிவாரத்தின் பயங்கரவாதம். இந்து, பயங்கரவாதம் அல்ல” என்று பதிலடி கொடுத்துள்ளார்.