சர்வதேச தரத்தில் உருவாகிவரும் ஆந்திர தலைநகர் அமராவதி

சர்வதேச தரத்தில் உருவாகிவரும் ஆந்திர தலைநகர் அமராவதி
சர்வதேச தரத்தில் உருவாகிவரும் ஆந்திர தலைநகர் அமராவதி
Published on

ஆந்திராவின் தலைநகரான அமராவதியை சர்வதேச தரத்தில் கட்டமைக்கும் பணிகளில் தொட‌ர்ந்து முன்னேற்றத்தைச் சந்தித்து வருகிறார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. வளர்ந்த நாடுக‌ளின் பெரு நகரங்களுக்கு இணையாக அமராவதியை உருவாக்கும் அவரது முயற்சிகள் அனைத்து தரப்பினரையும் ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கின்றன.

ஒருங்கிணைந்த ஆந்திராவிலிருந்து தெலங்கானா பிரிந்த பிறகு, ஆந்திராவின் தலைநகராக அமராவதியை உருவாக்கும் பணிகள்‌ முன்னெடுக்கப்பட்டன. சர்வதேச நகரங்களுள்‌ ஒன்றாக அமராவதியை‌ கட்டமைக்கத் தேவையான திட்டமிடல்களைத் தொடர்ந்து மெருகேற்றிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, 9 வகையான தீம்கள் கொண்ட நகரங்களாகவும், 27 நகரமைப்புகளாகவும் அமராவதியை உருவாக்க முடிவு செய்தார்.‌ அந்த கனவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சபதமேற்றிருப்பதாகவும்‌ குறிப்பிட்டார்.

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பேட்டியில், குண்டூர் மாவட்டத்தின் கிருஷ்ணா நதிக்கரையோரம் அமராவதியில் கடந்த மார்ச் 2015ல் மொத்தம் 33 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 2050ம் ஆண்டு 30 லட்சத்து 55 ஆயிரம் பேர் வசிப்பார்கள் எனக் கணக்கிட்டும், நகருக்கு வணிக, வர்த்தக நிறுவனங்களுக்கான பணிக்கு வந்து செல்வோர் எண்ணிக்கை 11 லட்சத்து 7‌3 ஆயிரமாக இருக்குமெனக் கணக்கிட்டும் அதற்கேற்ப கட்டமைப்புகள் வடிவமைக்கப்பட்டன. அனைத்து அடிப்படை கட்டமைப்புகளையும் ஒருங்கே பெற்ற சாலைகள், மின் பகிர்மானம், குடிநீர் வசதி, கழிவுநீர்க் கால்வாய்கள், வெள்ள நீர் வடிகால்கள் என அனைத்து கட்டமைப்புகளையும் கொண்ட ஆகச் சிறந்த நகராக உருவாக்கத் திட்டப்பட்டு, அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. தெலங்கானாவுக்கு ஒரு ஹைதராபாத், தமிழ்நாட்டுக்கு ஒரு சென்னை, ‌கர்நாடகாவுக்கு ஒரு பெங்களூரு இருக்கிறது. அதுபோல நமக்கும் ஒரு நகரம் இருக்க வேண்டுமென நினைப்பது தவறா? உலகத்திலேயே சிறந்த இடம் எதுவென்று கேட்டால் அது அமராவதி நகரமாக இருக்கும். நமது தலைநகரமாக இருக்கும். அதை நோக்கியே நாம் முன்செல்கிறோம் என்று கூறினார்.

திட்டங்கள் வெறும் திட்டங்களாக மட்டும் இல்லாமல், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. சர்வதேச தரத்தினாலான கல்வியை அமராவதியில் கிடைக்கச் செய்ய வேண்டுமென்ற நோக்கில் அங்கு முதன் முதலாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தையும் அவர் திறந்து வைத்தார். அமராவதி மீதான அவரது கனவுத் திட்டம் உருப்பெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com