அனைத்து கல்லூரி பட்டப்படிப்புகளுக்கும் ஆங்கிலப்பாடம் கட்டாயம்: ஆந்திர அரசு அறிவிப்பு

அனைத்து கல்லூரி பட்டப்படிப்புகளுக்கும் ஆங்கிலப்பாடம் கட்டாயம்: ஆந்திர அரசு அறிவிப்பு
அனைத்து கல்லூரி பட்டப்படிப்புகளுக்கும் ஆங்கிலப்பாடம் கட்டாயம்: ஆந்திர அரசு அறிவிப்பு
Published on

ஆந்திராவில் அனைத்து கல்லூரிகளின் பட்டப்படிப்புகளுக்கும் ஆங்கிலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இளங்கலை (யுஜி) மட்டத்தில் ஆங்கிலத்தை அறிமுகப்படுத்துவது பட்டதாரிகளின் தொழில் வாய்ப்பை மேம்படுத்தும் என்று ஆந்திர மாநில உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

2021-22 கல்வியாண்டில் இருந்து, பட்டதாரிகளின் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும் நம்பிக்கையில், ஆந்திராவில் உள்ள அனைத்து அரசு, தனியார் உதவி மற்றும் உதவி பெறாத கல்லூரிகளின் பட்டப்படிப்புகளுக்கும் ஆங்கிலப்பாடம் கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ஆந்திர உயர்கல்வித் துறை, இளங்கலை (யுஜி) மட்டத்தில் ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்துவது பட்டதாரிகளுக்கு சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெறவும், திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் உதவும் என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் பள்ளிகளில் 1 முதல் 6 வகுப்புகளுக்கு ஆங்கிலப்பாடத்தை கட்டாயமாக்கும் மாநில அரசின் உத்தரவினை தடுத்து நிறுத்தியது, உச்சநீதிமன்றமும் இந்த தடையை நீக்க மறுத்துவிட்டது. ஆங்கில மொழியில் வகுப்புகள் கற்பிக்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் அழுத்தத்தை மாநிலத்தில் எதிர்க்கட்சிகளும் எதிர்த்தன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com