ஆந்திராவில் அமராவதியை தலைநகராக அறிவிக்க வலியுறுத்தி நடைபெற்ற பாதயாத்திரையில் விவசாயி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் அவரது உயிரை காப்பாற்றியுள்ளார்.
ஆந்திராவில் மாநிலம் தலைநகர் அமராவதிக்காக சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியின் போது நிலங்களை வழங்கிய விவசாயிகள், அமராவதியை தலைநகராக அமைக்க கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் இரண்டாவது கட்டமாக நிலங்களை கொடுத்த விவசாயிகள் பாத யாத்திரையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த பாத யாத்திரை கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் காமன் இந்தியா பாலத்தின் அருகில் சென்றபோது, விவசாயி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தரையில் விழுந்தார். உடனே பதறி அவரை காப்பாற்ற மற்ற விவசாயிகள் முயன்றனர். உடனே அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் திரிநாத் சம்பவ இடத்துக்கு வந்து, மாரடைப்பு ஏற்பட்ட விவசாயிக்கு முதலுதவியான சிபிஆர் செய்து, விவசாயின் உயிரை காப்பாற்றினார்.
எதிர்ப்பாராத விதமாக மாரடைப்பில் மயங்கி விழுந்த விவசாயிக்கு உடனடியாக சிபிஆர் முதலுதவி அவரின் உயிரை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர் திரிநாத்துக்கு விவசாயிகளும் பொதுமக்களும் நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் திரிநாத் செய்த முதலுதவி சிகிச்சை வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி இன்ஸ்பெக்டருக்கு திரிநாத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மருத்துவர்கள் கூறுவது போல் , சிபிஆர் என்ற முதலுதவி பல அவசரகால சூழ்நிலைகளில் ஒரு உயிர் காக்கும் செயலாக மாறுகிறது. அதனால் முதலுதவி சிபிஆர் சிகிச்சையை அனைவரும் சரியாக கற்றுகொண்டு வைத்துக்கொள்ள வேண்டும்.