ஆந்திரா| அன்று வீடு..இன்று அலுவலகம்; ஜெகன் கட்டடம் இடிப்பு..பழிக்குப்பழி வாங்கும் சந்திரபாபு நாயுடு!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தடேபள்ளியில் கட்டப்பட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மத்திய அலுவலகம் இன்று (ஜூன் 22) அதிகாலை இடிக்கப்பட்டது.
தடேபள்ளி கட்டடம்
தடேபள்ளி கட்டடம்எக்ஸ் தளம்
Published on

ஆந்திராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராகப் பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி குறித்த சீக்ரெட் தகவல்களைத் தேடும் பணியில் சந்திரபாபு நாயுடு ஆட்சி களமிறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதாவது, தம்மைச் சிறையில் வைத்த ஜெகனைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில், அவர் சம்பந்தமான புகார்களைத் தீவிரமாகத் தேடி வருகிறது. ஆனால், அதற்கு முன்னரே அவரைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டுமுன்பு இருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கப்பட்டன.

இதையும் படிக்க: வீட்டுப் பணியாளர்களை கொடுமைப்படுத்திய வழக்கு: ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறைத்தண்டனை

தடேபள்ளி கட்டடம்
ஆந்திரா| ஆட்டம் ஆரம்பம்.. ஜெகன் வீடு முன்பு இருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள்.. இடித்த கார்ப்பரேஷன்!

இதைத் தொடர்ந்து, விசாகப்பட்டினம் ருஷிகொண்டாவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் கட்டப்பட்ட அரண்மனை போன்ற பங்களாவும் பேசுபொருளானது. ஆனால், ’அது ஜெகன் மோகன் ரெட்டிக்கோ அல்லது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கோ சொந்தமானது இல்லை. ஆந்திர கட்டுமான கலையைக் காட்டும் வகையில் அவை கட்டப்பட்டுள்ளது’ என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து அந்த விவகாரம் அப்படியே அமுங்கிப்போனது.

இந்த நிலையில், ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாடேபள்ளி மண்டலத்தில் உள்ள சீதாநகரம் படகு வளாகத்தில் உள்ள ஆர்எஸ் எண்.202-ஏ-1ல் 870.40 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டு வந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மத்திய அலுவலகம் இன்று (ஜூன் 22) அதிகாலை இடிக்கப்பட்டது.

ஆந்திரப் பிரதேச தலைநகர் மண்டல மேம்பாட்டு ஆணையம் (APCRDA) மற்றும் மங்களகிரி தாடேபள்ளி முனிசிபல் கார்ப்பரேஷன் (MTMC) இணைந்து அந்தக் கட்டடத்தை இடித்துத் தள்ளியுள்ளது. சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டதாலேயே அந்தக் கட்டடம் இடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், “இது பழிவாங்கும் செயல்” என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதையும் படிக்க: மத்திய பிரதேசம்| கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. தப்பிக்க அரை நிர்வாணமாய் ஒன்றரை கி.மீ. ஓடிய இளம்பெண்!

தடேபள்ளி கட்டடம்
ஆந்திரா| ஆட்டம் ஆரம்பம்.. ஜெகன் கட்டிய அரண்மனை பங்களா.. குறிவைத்த சந்திரபாபு நாயுடு! பழிக்குப்பழியா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com