கைகொடுத்த ஃபேஸ்புக்: 12 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினருடன் இணைந்த சிறுமி..!

கைகொடுத்த ஃபேஸ்புக்: 12 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினருடன் இணைந்த சிறுமி..!
கைகொடுத்த ஃபேஸ்புக்: 12 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினருடன் இணைந்த சிறுமி..!
Published on

ஆந்திராவில் சிறுமி ஒருவர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஃபேஸ்புக் மூலம் தனது குடும்பத்தை கண்டறிந்து மீண்டும் இணைந்துள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் உள்ள ஒரு சிறுமி தனது குடும்பத்தினரை தவறவிட்டுள்ளார். காணாமல்போன அந்த ஆந்திர சிறுமி தற்போது தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார். அதற்கு உதவியாக இருந்த ஃபேஸ்புக்கிற்கு நன்றி தெரிவித்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த சிறுமி பவானி. இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னால் குடும்பத்தினரை விட்டு மாயமாகியுள்ளார். தவறிப்போன இவர் தன் அன்றாடத் தேவைக்காக பல இடங்களில் வேலை செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஆந்திராவிலுள்ள கிருஷ்ணா என்பவரது வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இவர் தனது நான்கு வயதில் வீட்டை விட்டுப் பிரிந்து வந்த கதையை கிருஷ்ணாவிடம் கூறியுள்ளார். தான் விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் குறிப்புக் கொடுத்துள்ளார். ஆனால் தான் காணாமல் போன பிற்பாடு ஒரு பெண்மணியால் தத்து எடுக்கப்பட்டு அன்று முதல் விஜயவாடாவில் வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார். இந்தக் கதையை கேட்ட கிருஷ்ணா, இவரை மீண்டும் அவரது வீட்டாருடன் சேர்த்து வைக்க நினைத்துள்ளார். அவர் ஃபேஸ்புக் மூலம் பவானியின் குடும்பத்தினரைக் கண்டறிந்து மீண்டும் அவரை அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்திருக்கிறார்.

தன் பெற்றோருடன் மீண்டும் இணைவது குறித்து பவானி தனது மகிழ்ச்சியை  பகிர்ந்து கொண்டுள்ளார். அது சரி, கிருஷ்ணா, ஃபேஸ்புக் மூலம் பவானியின் குடும்பத்தினரை கண்டுபிடித்தாரே? அது எப்படி..? அவரே சொல்கிறார்.

“நான் வேலைக்கு எடுக்கும் ஆட்களின் ஆவணங்களை வாங்கி சேமித்து வைப்பது வழக்கம். அதேபோல அந்தப் பெண்ணின் வயதை அறிந்து கொள்வதற்கான ஆவணங்களை நான் கேட்டேன். அந்தப் பெண் தன்னிடம் எந்த ஆவணங்களும் இல்லை என்று கூறினார். மேலும் தான் காணாமல் போன பிறகு ஒரு குடும்பத்தினரால் தத்தெடுக்கப்பட்டு, வளர்ந்து வருவதால் தன்னிடம் எந்த ஆவணமும் இல்லை என்றும் அவர் கூறினார். உடனே நான் அவளிடம், உன்னுடைய உண்மையான பெற்றோருடன் சேர்ந்து வாழ விரும்புகிறாயா என்று கேட்டேன். அதற்கு அவர் ஆமாம் என்று சொன்னார். அதன் பின்னர் நான் அவளிடமிருந்த விவரங்களை வைத்து ஃபேஸ்புக்கில் தேட ஆரம்பித்தேன்”எனக் கிருஷ்ணா கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து விளக்கிய அவர், “சிலருக்கு மட்டும் நான் ஃபேஸ்புக்கின் மூலம் ஒரு செய்தியை அனுப்பினேன். ஒருவர் மட்டும் எனது செய்திக்கு பதிலளித்தார். உடனே அவரது விவரங்களை நான் எடுத்துக்கொண்டேன். அந்த விவரங்கள் அந்தப் பெண் வழங்கிய தகவலுடன் பொருந்தி வந்தது. பின்னர் அந்த நபரே  ஒரு வீடியோ அழைப்பை விடுத்தார். அதன்மூலம் பவானியும் அவரது பெற்றோரும் பேசினர். இதன்மூலம் அவர்கள்தான் பெற்றோர்கள் என உறுதி செய்தோம்”என கிருஷ்ணா கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com