தக்காளி விற்று 45 நாட்களில் 4 கோடி ரூபாய் சம்பாதித்த விவசாயி!

தக்காளி விலை விண்ணை முட்டுமளவு உயர்ந்துள்ள நிலையில் ஆந்திர விவசாயி ஒருவர் தக்காளி விற்று 4 கோடிவரை சம்பாதித்துள்ளார்.

சாமானியர்களுக்கு தக்காளியை பார்த்தே ரொம்ப நாளாகிவிட்டது. காரணம், அதன் விலை உயர்வு. இன்று மட்டும் கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது தக்காளி.

இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதாலும், தற்போது பெய்த மழையில் தக்காளி விளைச்சல் நீரில் அடித்து செல்லப்பட்டதாலும் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்புவரை ஒரு கிலோ 10 ரூபாய் என்றிருந்த தக்காளியின் விலை, தற்போது கிலோவிற்கு ரூ.200-ஐ எட்டியுள்ளது. இந்த சாதகமான சூழ்நிலையால் தக்காளி விவசாயிகள் தற்போது நல்ல லாபம் பார்த்து வருகின்றனர்.

ஆந்திர விவசாயி
உச்சத்தை தொட்ட தக்காளி விலை... கிலோ ரூ. 200க்கு விற்பனை! வியாபாரிகளும் வேதனை!

தக்காளி ஒரு கிலை விலை ரூ.208-ஆக உயர்வு!

சமீபகாலமாக ஆந்திராவின் அன்னமையா மாவட்டம் மதனப்பள்ளி மார்க்கெட்டில் தக்காளி விலை வரலாறு காணாத சாதனை படைத்து வருகிறது. அதில் நேற்று, என்றும் இல்லாத வகையில் தக்காளி கிலோ ரூ.208-ஐ எட்டியது. குறைந்தபட்ச விலை கிலோ ₹140 ஆக விற்கப்பட்டது. இதற்கு காரணம் மதனப்பள்ளி சந்தைக்கு 253 டன் தக்காளி மட்டுமே வந்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆந்திர விவசாயி
ஆந்திர விவசாயி

மேலும் மதனப்பள்ளி பகுதியில் விளைச்சல் இல்லாததாலும், தக்காளி சீசன் தாமதமானதாலும், வரலாறு காணாத விலை ஏற்றம் காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மதனப்பள்ளி சந்தையில் முதல் ரகம் தக்காளி ரூ.160- ரூ.208 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் ரகம் ரூ.120- ரூ.156 வரை உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 25 கிலோ தக்காளி பெட்டியின் விலை ₹.5200-ஐ எட்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையால் பயிர்கள் நாசமானதும், இந்த நிலைக்கு மற்றொரு காரணம் எனத் தெரிவிக்கின்றனர்.

45 நாட்களில் தக்காளி விற்று 4 கோடி வரவு! சுமார் 3 கோடி லாபம் பார்த்த விவசாயி!

இதற்கிடையே ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தக்காளியால் ஒரே மாதத்தில் கோடீஸ்வரராகியுள்ளார். சித்தூர் மாவட்டம் சோமலா மண்டலத்தில் உள்ள கரகமண்டா பகுதியைச் சேர்ந்த சந்திரமௌலி, தனது தம்பி முரளி மற்றும் தாய் ராஜம்மாவுடன் சேர்ந்து தக்காளி பயிரிட்டுள்ளார். சந்திரமௌலியின் குடும்பத்தினர், புலிச்சேரி மண்டலம், கரகமண்டாவில் 12 ஏக்கரிலும், சுவ்வாரபுபள்ளேயில்10 ஏக்கரிலும், தக்காளி சாகுபடி செய்துள்ளனர். எப்போதும் நஷ்டத்தை விட்டுச்செல்லும் தக்காளி பயிர் இந்த முறை சந்திரமௌலியை கோடீஸ்வரராக மாற்றியுள்ளது.

ஆந்திர விவசாயி
ஆந்திர விவசாயி

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், விவசாயி சந்திரமௌலி கர்நாடகாவின் கோலார் சந்தையில் தக்காளியை விற்றுள்ளார். 15 கிலோ தக்காளி பெட்டி ஒவ்வொன்றும், ரூ.1000 முதல் ரூ.1500 வரையிலான விலைக்கு விற்பனையாகியுள்ளது. இப்படி மொத்தமாக விவசாயி சந்திரமௌலி 40 ஆயிரம் பெட்டிகளை விற்றுள்ளார். அதன் மூலம் அவருக்கு 45 நாட்களில் சுமார் ரூ.4 கோடி வருவாய் வந்துள்ளது. 22 ஏக்கரில் தக்காளி சாகுபடிக்கு முதலீடு 70 லட்சம், ரூ.20 லட்சம் கமிஷன், ரூ.10 லட்சம் போக்குவரத்து செலவு செய்ததாக சந்திரமௌலி தெரிவித்தார். சாகுபடி செலவு முடிந்து ₹.3 கோடி மீதம் உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com