ஆந்திர அரசியல் களத்தில் ‘தனி ஒருவன்’ ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர அரசியல் களத்தில் ‘தனி ஒருவன்’ ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திர அரசியல் களத்தில் ‘தனி ஒருவன்’ ஜெகன்மோகன் ரெட்டி
Published on

ஆந்திராவில் நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி இமலாய வெற்றியை பெற்றது. இதனையடுத்து அந்தக் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த மாதம் 30ஆம் தேதி ஆந்திராவின் முதலமைச்சராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து அவர் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 

முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கோப்பாக சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களின் ஊதியத்தை ரூ3ஆயிரத்திலிருந்து 10ஆயிரமாக அதிகப்படுத்தி கையெழுத்திட்டார். அத்துடன் சுகாதாரத்துறைக்கான திட்டத்தை புதிதாக மாற்றியமைத்துடன் அந்தத் திட்டத்தின் செயல்பாடுகளை அவரே பார்வையிடுவார் என்று அதிரடியாக தெரிவித்தார். 

விவசாயிகளுக்கு ஆதரவாக ‘போலாவரம்’ திட்டத்தை விரைவு படுத்துவது மட்டுமல்லாமல் மற்றொரு புதிய திட்டத்தையும் அறிவித்தார் ஜெகன் மோகன்.  ‘ரையத் பரோசா’ என்ற திட்டத்தின்படி அனைத்து விவசாயிகளும் ஆண்டிற்கு 12,500 ரூபாய் சலுகையை பெருவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வரும் அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். 

முதலாவதாக ஆந்திராவில் பாயும் கோதாவரி,கிருஷ்ணா உள்ளிட்ட நதிநீரை இணைக்க புதிய அணை கட்டப்படும் போலாவரம் திட்டத்தை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன் அடைவார்கள் என்று ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.  இரண்டாவதாக, ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள் மற்றும் 25 கேபினட் அமைச்சர்கள் ஆகியோர் செயல்படுவார்கள். அத்துடன் இவர்களது பதவிக்காலம் 30 மாதங்களாக இருக்கும் என்ற அதிரடி முடிவை அறிவித்தார். மேலும் இந்த 5 துணை முதல்வர்களையும் எஸ்.சி, எஸ்டி மற்றும் பழங்குடி வகுப்பினரிலிருந்து தேர்வு செய்து தனது கட்சியிலும் ஆட்சியிலும் அனைவரும் சமம் என்று காட்டியுள்ளார். 

மூன்றாவதாக ஆந்திராவில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் அனைத்தையும் வீட்டிற்கே சென்று விநியோகிக்கப்படும் என்ற முடிவை அறிவித்துள்ளார். அத்துடன் மாநில போக்குவரத்து கழகத்தை அரசே நடத்தும் என்ற முடிவையும் தெரிவித்துள்ளார். மேலும் ஆந்திராவில் அமைச்சர்கள் ஏதாவது தவறு அல்லது முறைகேடுகளில் ஈடுபட்டால், அவர்கள் கட்சி மற்றும் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்ற எச்சரிக்கையை அமைச்சர்களுக்கு விடுத்துள்ளார். 

இதனையடுத்து அவர் ஆந்திராவில் செயல்பட்டுவரும் சட்டவிரோதமான மதுபானக் கடைகள் அகற்றப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்தச் சட்டவிரோத மதுபான கடைக்கள் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை இது பாதிப்பதால் இந்த முடிவு எடுகப்பட்டுள்ளது என்று ஜெகன் தெரிவித்தார். இவை மட்டுமில்லாமல் தொழிற்சாலைகள் மேல் கிரீன் வரி, குறைந்த வட்டியில் கடன், மண்சார்ந்த கொள்கைகள் என்ற பல அறிவிப்புகளை ஜெகன் விடுத்துள்ளார். 

ஆந்திராவில் மண் அள்ளுவதற்கு 15 நாட்களுக்கு ஜெகன் மோகன் ரெட்டி தடைவித்துள்ளார். ஏனென்றால் ஆந்திர அரசு மணல் அள்ளுவது தொடர்பாக ஒரு புதிய கொள்கை கொண்டுவரவுள்ளது. இந்தக் கொள்கை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்தப் புதிய கொள்கை அரசிற்கும் நுகர்வோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்று ஜெகன் மோகன் அரசு தெரிவித்துள்ளது. 

ஆட்சியமைத்த 15 நாட்களுக்குள் ஜெகன் மோகன் ரெட்டி இத்தகையை புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com