அதானி மீது குற்றச்சாட்டு| ஆந்திர அரசியலில் வெடித்த புயல்.. ஜெகனுக்கு செக் வைக்கும் சந்திரபாபு!

”அதானி விவகாரம் தொடர்பாக, நாங்கள் நிலைமையை ஆய்வு செய்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம்" என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சட்டசபையில் பேசும்போது தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு, அதானி, ஜெகன்மோகன்
சந்திரபாபு, அதானி, ஜெகன்மோகன்எக்ஸ் தளம்
Published on

அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டு!

இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, ரூ.2,239 கோடி ($265 மில்லியன்) பிரபல தொழிலதிபருமான கவுதம் அதானி லஞ்சம் கொடுக்க முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. முறைகேடாகப் பெறப்பட்டதாக கூறப்படும் இந்த ஒப்பந்தத்தை முன்வைத்து, கடன் மற்றும் பத்திரங்கள் மூலம், அமெரிக்கா நிறுவனங்களிடம் இருந்து சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அதானி குழுமம் திரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதானியின் இந்தச் செயல் வெளிநாட்டு முதலீட்டு சட்டப்படி தவறானது எனக்கூறி நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கவுதம் அதானி தவிர அவர் உறவினர் சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதே புகாரில் அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையமும் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

அதானி, அமெரிக்கா
அதானி, அமெரிக்காஎக்ஸ் தளம்

அதானி பிரச்னையை கையில் எடுத்த ஆந்திர அரசு!

அதேநேரத்தில், இந்தக் குற்றச்சாட்டுக்கு அதானி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. எனினும், இந்த குற்றச்சாட்டு காரணமாக, பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்தன. மேலும், அதானி குழுமத்துடனான எரிசக்தி துறை ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் அதானிக்கு அடி மேல் அடி விழுந்து வருகிறது. தொடர்ந்து இந்திய அரசியலிலும் அதானி புயல் வீசத் தொடங்கியுள்ளது. அது, ஆந்திராவிலும் வேகமெடுத்துள்ளது. ”இதுதொடர்பாக, நாங்கள் நிலைமையை ஆய்வு செய்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம்" என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சட்டசபையில் பேசும்போது தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ரூ.10.800 மட்டுமே.. மோதிர வடிவில் வாட்சை அறிமுகப்படுத்திய கேசியோ.. சிறப்புகள் என்னென்ன?

சந்திரபாபு, அதானி, ஜெகன்மோகன்
அதானிக்கு மேலும் சிக்கல் | ஆஸ்திரேலியால் இனவெறி பாகுபாடு.. பழங்குடி இன மக்கள் அதிர்ச்சி புகார்!

”நடவடிக்கை எடுப்போம்”-சந்திரபாபு நாயுடு

மேலும் இதுகுறித்து அவர், ”இந்த விவகாரத்தில் மேலும் பல உண்மைகள் வெளிவரவில்லை. இப்போது உண்மைகள் வெளிவந்து கொண்டிருப்பதால், இதில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து அரசு யோசித்து வருகிறது. நாங்கள் நிலைமையை ஆய்வுசெய்து, என்ன செய்ய வேண்டும் என்று பார்த்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம். அரசாங்கத்தின் முதன்மைப் பொறுப்பு பொதுமக்கள் நலனிலேயே உள்ளது. எனவே தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் தவறு மீண்டும் நடக்காமல் இருக்க ஒரே வழி.

இன்று வெளிவந்துள்ள இந்த விவகாரம், பொது மன்றத்தில் ஆந்திரா என்ற பிராண்டை மோசமாக சேதப்படுத்தியுள்ளது. மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது. இது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. வழக்கு ஆவணங்களை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. நாங்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ”மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது” - உக்ரைன் முன்னாள் ராணுவத் தளபதி! யார் இந்த வலேரி ஜலுஷ்னி?

சந்திரபாபு, அதானி, ஜெகன்மோகன்
தீயாய் பரவிய லஞ்ச குற்றச்சாட்டு செய்தி! கடும் வீழ்ச்சியை சந்தித்த அதானி குழும பங்குகள்! நடந்ததுஎன்ன?

ஜெகன் மோகன் ஆட்சியில் நடந்ததாக அமெரிக்க வைத்த குற்றச்சாட்டு!

முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், மின்சார கொள்முதல் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாநில மின்வாரிய அதிகாரிகளுக்கு அதானி லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த வழக்கில் அப்போதைய உயர் அதிகாரி ஒருவருக்கே அதிகபட்ச லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு, அதானி ரூ.1750 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப் பின்பே அப்போதைய ஆந்திர அரசு இந்திய சூரிய மின்சார நிறுவனத்திடம் இருந்து 7 ஜிகாவாட் மின்சாரம் வாங்க ஒப்புக்கொண்டதாகவும் குற்றச்சாட்டு ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன், ஆந்திரப் பிரதேச அரசு மின்சார ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இதையடுத்து 2021 ஆகஸ்ட் மாதம் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து, அதானி பணம் தொடர்பாக உறுதி அளித்ததாக அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தச் சந்திப்பு நடந்தபிறகுதான் ஆந்திரப் பிரதேச அரசு சுமார் 7 ஜிகாவாட் சூரிய சக்தியை வாங்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. வேறு எந்த மாநிலங்களும் இந்தத் தொகைக்கு வாங்காத நிலையில் ஆந்திரா வாங்க ஒப்புக்கொண்டிருப்பதும் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா| தவறான கருத்துக்கணிப்பா? ஹரியானாவைப்போல் மாற வாய்ப்பு? ஆய்வில் வெளியான புதிய தகவல்!

சந்திரபாபு, அதானி, ஜெகன்மோகன்
முறைகேட்டில் ஈடுபட்டாரா கவுதம் அதானி? அமெரிக்காவில் வழக்குப்பதிவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com