10 ஆண்டுகள் ஆனபோதும் ஆந்திரா, தெலங்கானா இடையே தீராத பிரச்னைகள்.. பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

ஆந்திரப் பிரதேச மாநிலம் தெலங்கனா தொடர்பான நிலுவையில் உள்ள பிரச்னைகள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கான கூட்டம் இரு மாநில முதல்வர்கள் தலைமையில் நடைபெற்றது.
சந்திரபாபு நாயுடு, ரேவந்த் ரெட்டி
சந்திரபாபு நாயுடு, ரேவந்த் ரெட்டிஎக்ஸ் தளம்
Published on

ஆந்திரப் பிரதேச மாநிலம் தெலங்கானா தொடர்பான நிலுவையில் உள்ள பிரச்னைகள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்காக அம்மாநில முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு மற்றும் தெலங்கானா முதல்வர் ஏ.ரேவந்த் ரெட்டி ஆகியோர் தலைமையில் கடந்த ஜூலை 6ஆம் தேதி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

தெலங்கானா மாநிலம் ஆந்திராவிலிருந்து பிரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆனபோதிலும், இரு மாநிலங்களுக்கு இடையேயான சொத்துகள் பிரிப்பு, அரசு நடத்தும் நிறுவனங்கள், மின்கட்டண பாக்கி, மீதமுள்ள ஊழியர்களை அந்தந்த மாநிலங்கள் மாற்றுவது உள்ளிட்ட பல பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இப்பிரச்னைகள் குறித்து இரு மாநில முதல்வர்களும் கூடி விவாதித்தனர்.

இதையும் படிக்க: கிரெடிட் கார்டு உபயோகிப்பவரா நீங்கள்? இந்த செய்தி உங்களுக்குதான்!

சந்திரபாபு நாயுடு, ரேவந்த் ரெட்டி
தெலங்கானா: முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்பு

அப்போது, போலாவரம் திட்டத்தின்போது ஆந்திராவுக்கு வழங்கப்பட்ட ஏழு மண்டலங்களை திருப்பித் தருமாறு தெலங்கானா அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும், 299 டிஎம்சியிலிருந்து 558 டிஎம்சியாக (ஆயிரம் மில்லியன் கன அடி) நீர் பங்கை அதிகரிக்கவும் தெலங்கானா கோரியுள்ளது. தவிர, 1,000 கி.மீ. கடற்கரை, திருமலை திருப்பதி தேவஸ்தானங்களின் வருவாய், கிருஷ்ணாப்பட்டினம், மச்சிலிப்பட்டினம், கங்காவரம் ஆகிய துறைமுகங்களின் ஒரு பகுதியையும் கோரியுள்ளது.

இரண்டு மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தின் ஆலோசனையின்படி, மாநில சொத்துக்கள் பிரிப்பு தொடர்பாக இருமாநிலத்தினரும் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவை நியமிக்க முடிவு செய்துள்ளனர். அதன்பின் ஓரிருநாட்களில் இருமாநிலம் சார்பில் குழு அமைக்கப்பட உள்ளது. இக்குழுவினர் இந்த வார இறுதிக்குள் பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளனர்.

இதையும் படிக்க: 90S கிட்ஸ்களின் சூப்பர் ஸ்டார்... ஜான் சீனா ஓய்வு அறிவிப்பு.. சாதனைகளும் வாழ்க்கைப் பயணமும்..

சந்திரபாபு நாயுடு, ரேவந்த் ரெட்டி
நன்றி தெரிவிப்பு கூட்டத்துக்கு சென்ற சந்திரபாபு நாயுடு... மழைக்கிடையே கொண்டாடித் தீர்த்த மக்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com