அந்தமான் - நிகோபார் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் பல இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டன.
அந்தமான் - நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்படுவது என்பது அடிக்கடி நடைபெறும் நிகழ்வு ஆகும். இதனால் அங்குள்ள மக்கள் நிலநடுக்கத்தை எதிர்கொள்ள எந்நேரமும் தயார் நிலையிலேயே இருப்பர். மேலும், இந்தோனேஷியாவில் பெரிதளவு நிலநடுக்கம் ஏற்படும் சமயங்களிலும் அந்தமான் - நிகோபாரில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது உண்டு.
இந்நிலையில், இன்று காலை நேரத்தில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அந்தமான் - நிகோபார் தீவுகளில் ஏற்பட்டது. அங்குள்ள கேம்பெல் பே என்ற கிராமத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தீவுகளின் பல பகுதிகளில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேத விவரங்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.