உலகளவில் மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடான நம் இந்தியாவில் சுமார் 10.8 மில்லியன் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 10.4 மில்லியன் பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கொரோனா தொற்று தனது சித்து வேலைகளை காட்டியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவு பகுதி இப்போது கொரோனா இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது அந்த தீவில் கொரோனா தொற்றுடன் யாருமே இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நான்கு பேரும் பூரண குணமடைந்ததாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்தமானில் மொத்தமாக 4994 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 4932 பேர் குணம் அடைந்துள்ளனர்.
62 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.