ஆனந்த் அம்பானி திருமணம் | ‘Return Gift’-ஆக கொடுக்கப்பட்ட Watch... அப்படி என்ன ஸ்பெஷல் இதில்?

மும்பையில் நடந்த தனது திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய பிரபலங்களுக்கு அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி கொடுத்த பரிசு அனைவரின் புருவங்களை உயரச் செய்துள்ளது.
ஆனந்த் அம்பானி
ஆனந்த் அம்பானிமுகநூல்
Published on

செய்தியாளர் : ஆண்டோ எம் தாம்சன்

நம்ம ஊர்களில் திருமண வைபவத்திற்கு செல்பவர்களுக்கு திருமண வீட்டார் தாம்பூல பைகளை வழங்குவார்கள். அதில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, இனிப்பு, சிறிதான பரிசு பொருட்கள் இடம்பெற்றிருக்கும். வசதி படைத்தோரின் இல்லத் திருமண விழாவில் தாம்பூல பைகளில் அவர்களின் அந்தஸ்துக்கு ஏற்ப பொருட்கள் இருக்கும். சிலர் புதுமையாக புத்தகங்கள், மரக்கன்றுகள் என வழங்குவார்கள்.

ஆனால் உலகின் மிகப்பெரிய பணக்காரரான அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு பொருள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படி என்ன பரிசு அது? பார்க்கலாம்...

ஆனந்த் அம்பானி கொடுத்த வாட்ச்சுடன் ரன்வீர் சிங்
ஆனந்த் அம்பானி கொடுத்த வாட்ச்சுடன் ரன்வீர் சிங்

மும்பையில் உள்ள ஜியோ வர்த்தக மையத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த முக்கிய பிரபலங்களுக்கு அம்பானியின் மகனும், மணமகனுமான ஆனந்த் அம்பானி 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான கைக் கடிகாரத்தை பரிசாக வழங்கியுள்ளார். AUDEMARS PIGUET நிறுவனத்தின் ராயல் ஓக் கைக்கடிகாரத்தில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

ஆனந்த் அம்பானி
மணிப்பூரில் மீண்டும் தாக்குதல்: மத்திய ரிசர்வ் காவல்படை வீரர் பலி – காங்கிரஸ் கட்சி கண்டனம்!

18 கேரட் இளஞ்சிவப்பு தங்கத்தால் ஆன இந்த கைக்கடிகாரம், நீலக்கல் படிக பின்பக்கத்தைக் கொண்டது. இதில், கிராண்டே டாபிசெரி வடிவத்தில் ஒளிரும் நேரக்காட்டியும் உண்டு. நாள், வாரம், மாதம், ஆண்டு மட்டும் அல்ல லீப் ஆண்டுக்கு ஏற்ற வகையிலும் மாற்றம் செய்து கொள்ளலாம்.

நாம் எந்த நாட்டிற்கு செல்கிறோமோ அந்த நாட்டின் கால நிலைக்கு ஏற்பவும் இந்த கைக்கடிகாரத்தில் நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 40 மணி நேரம் பயன்படுத்தலாம். இளஞ்சிவப்பு தங்க வளையம், நீல லெதர் பட்டையுடன், 20 மீட்டர் ஆழம் வரை வாட்டர் proof திறனும் இந்த வாட்சுக்கு உள்ளது.

இத்தனை சிறப்பு அம்சங்களை கொண்ட இந்த ராயல் ஓக் கைக்கடிகாரத்தை நடிகர்கள் ஷாருக்கான், ரன்வீர் சிங், அர்ஜூன் கபூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் போஸ் கொடுத்து அதனை வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். தற்போது வாட்ச் மற்றும் பிரபலங்கள் அணிந்து கொண்டு போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com