உத்தரப் பிரதேச ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட ஆனந்திபென் படேல், இன்று பதவியேற்றுக்கொண்டார்.
சமீபத்தில், ஆளுநர்களை இடமாற்றம் செய்தும், புதிய ஆளுநர்களை நியமித்தும் குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டது. அதில் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், பீகார், நாகலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
பிகார் ஆளுநராக இருந்த லால்ஜி தாண்டன் மத்தியப் பிரதேச ஆளுநராகவும் மேற்குவங்க ஆளுநராக இருந்த கேசரிநாத் திரிபாதிக்கு பதிலாக, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜகதீப் தாங்கர் அம்மாநில ஆளுநராகவும். பாஜகவைச் சேர்ந்த ரமேஷ் பயஸ், திரிபுரா ஆளுநராகவும் பீகார் ஆளுநராக பஹூ சவுகானும் நாகலாந்து ஆளுநராக ஆர்.என்.ரவியும் மத்தியப் பிரதேச ஆளுநராக இருந்த குஜராத் மாநில முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல், உத்தரப்பிரதேச ஆளுநராகவும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஆனந்தி பென் படேல், உத்தரபிரதேச மாநில் ஆளுநராக இன்று பதவியேற்றுக் கொண்டார். இதில் அம்மாநில முன்னாள் ஆளுநர் ராம் நாயக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.