சைவ முறையில் பால் தயாரிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று விலங்குகள் நல அமைப்பான பீட்டா விடுத்த கோரிக்கைக்கு பதிலடி கொடுத்துள்ளது அமுல்.
அமுல் என்பது குஜராத் மாநிலத்தை தலைமையகமாக கொண்டு அமைக்கப்பட்ட பால் கூட்டறவு சங்கமாகும். இதற்கு விலங்குள் நல அமைப்பான பீட்டா அந்நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியது அதில் வளர்ந்து வரும் சைவப் பால் உற்பத்தி முறையை பயன்படுத்த வேண்டும் என விரும்புவதாக எழுதியது.
இதற்கு அமுல் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.சோதி பதிலடி கொடுத்துள்ளார், அதில் "10 கோடி பால் உற்பத்தியாளர்களுக்கு (அதில் 70% நிலமற்றவர்கள்) வாழ்வாதாரத்தை பீட்டா வழங்குவார்களா, அவர்கள் குழந்தைகள் பள்ளி கட்டணத்தை செலுத்துவார்களா. அதில் எத்தனை பேர், விலையுயர்ந்த ஆய்வகள் கொண்ட தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உணவை தயாரிக்க முடியும்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.