ரஜினிகாந்த் பாரதிய ஜனதா கட்சிக்கு வந்தால் அவரை வரவேற்கக் கதவுகள் திறந்தே இருப்பதாக அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதை அவர் கூறினார். கடந்த 15 முதல் 19ஆம் தேதி வரை சென்னையில் தனது ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்துப் பேசினார். சந்திப்பின் முதல் நாளும் கடைசி நாளும் அவர் அரசியலில் ஈடுபடுவது குறித்து தனது கருத்துகளை தெரிவித்தார். போர் வரும்போது எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு ரசிகர்களை அவர் கேட்டுக் கொண்டது, அவர் அரசியலில் இறங்கப் போகிறார் என்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில்,தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை வளர்க்கும் நோக்குடன் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், ரஜினியை பாரதிய ஜனதா கட்சியில் சேர அவர் அழைப்பு விடுத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.