''இல்லை.. இல்லை.. இந்த பையன் உண்மை இல்லை'': சிறுவனை பார்த்து வியந்த அமிதாப்!

''இல்லை.. இல்லை.. இந்த பையன் உண்மை இல்லை'': சிறுவனை பார்த்து வியந்த அமிதாப்!
''இல்லை.. இல்லை.. இந்த பையன் உண்மை இல்லை'': சிறுவனை பார்த்து வியந்த அமிதாப்!
Published on

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவ்வபோது புகைப்படங்கள், வைரல் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் பகிர்ந்துள்ள 6 வயது சிறுவனின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

தற்போது 8 வயதான சிறுவன் ஆடம் முகமது அமீர் விமானத்துக்குள் நின்று கொண்டு அதன் எந்திர பாகங்கள் குறித்து பேசிக்கொண்டு இருக்கும் வீடியோ 2 வருடங்களுக்கு முன்பு வைரலானது. அப்போது அமீருக்கு ஆறே வயது தான். அந்த வீடியோவில் விமானத்தின் தொழில் நுட்ப எந்திர பாகங்கள் குறித்தும் அது செயல்படும் விதம் குறித்தும் அவன் விவரிப்பான். அப்போது அந்த வீடியோவை கண்ட யூஏஇயின் எடிகேட் ஏர்வேஸ், சிறுவனின் ஆர்வத்துக்கு ஊக்கமாக மாதிரி விமானத்தின் ஒருநாள் பைலட்டாக அவனை அனுமதித்தது.

அந்த சிறுவனின் வீடியோவை தற்போது பகிர்ந்துள்ள நடிகர் அமிதாப்பச்சன், ''இல்லை, இல்லை, இல்லை, இல்லை... இந்த பையன் உண்மை இல்லை'' என்று வியந்து குறிப்பிட்டுள்ளார். 

ஆடம் முகமது அமீருக்கு விமானியாக வர வேண்டும் என்பது ஆசையாம். அது போலவே இந்த  சிறுவன் நிச்சயமாக விமானியாக ஆவான் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆடம் முகமதுவின் அப்பாவும் விமானி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com