குஜராத் மாநிலத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் பாஜக தலைவர் அமித்ஷா போட்டியிட உள்ளார்.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜே.பி.நட்டா, குஜராத் மாநிலத்தில் நடைபெற உள்ள மாநிலங்களைத் தேர்தலில் பாஜக தலைவர் அமித்ஷாவும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார். ஆகஸ்ட் 8ம் தேதி நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜூலை 28ல் அமித்ஷா வேட்புமனுத் தாக்கல் செய்வார் என்று தெரிகிறது. குஜராத் முதலமைச்சராக மோடி பதவி வகித்த காலத்தில் பல்வேறு பதவிகளை வகித்த அமித்ஷா, தற்போது அம்மாநிலத்தின் நாராணபுரா தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருகிறார். குஜராத் மாநிலத்தில் ஆளும்கட்சியாக உள்ள பாஜக சார்பில் களமிறங்குவதால் அமித்ஷா வெற்றி பெறுவதில் சிக்கல் இருக்காது என்று கூறப்படுகிறது.