கொரோனா எதிரொலியாக மோடியை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் உயிரிழப்பு 3 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், அந்நோயைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். 16 இத்தாலியப் சுற்றுலாப் பயணிகள் உள்பட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனிடையே கொரோனா பரவாமல் தடுக்க கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்தவிதமான ஹோலி கொண்டாட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கொரோனா எதிரொலியாக மோடியை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பரவாமல் தடுக்க பொது இடங்களில் கூட வேண்டாம் எனவும் குடும்பத்துடன் சேர்ந்து ஹோலியை கொண்டாடுங்கள் எனவும் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.