“டெல்லி கலவரத்துக்கு காரணமானவர்களில் ஒருவர் கூட தப்ப முடியாது": அமித் ஷா

“டெல்லி கலவரத்துக்கு காரணமானவர்களில் ஒருவர் கூட தப்ப முடியாது": அமித் ஷா
“டெல்லி கலவரத்துக்கு காரணமானவர்களில் ஒருவர் கூட தப்ப முடியாது": அமித் ஷா
Published on

டெல்லியில் நடந்த கலவரத்தின்போது அம்மாநில காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டினார்.

நாடாளுமன்றத்தில் இப்பிரச்னை தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் டெல்லி காவல்துறை மீது எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசிய அவர், கலவரத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறினார். டெல்லியின் ஒரு பகுதியில் வெடித்த கலவரம், பிற பகுதிகளுக்கு பரவாத வண்ணம் அம்மாநில காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டினார். 36 மணி நேரத்துக்குள் கலவரத்தை டெல்லி காவல்துறையினர் கட்டுப்படுத்தியதாகவும் அமித் ஷா குறிப்பிட்டார்.

கலவரம் தொடர்பாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்பது முகத்தை கண்டறியும் தொழில்நுட்பம் மூலம் அடையாளம் காணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். கலவரத்தில் ஈடுபட்டவர்களின் உடைகளை வைத்து முடிவு செய்து விட முடியாது என்றும், கலவரத்துக்கு காரணமானவர்களில் ஒருவர் கூட தப்ப முடியாது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்தார்.

"கலவரத்தை கட்டுப்படுத்த ‌தாமதம் ஏன்?" என்ற கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா "கலவரம் நடந்த பகுதி மிகக் குறுகலானது. காய்கறி, பழக் கடைகள் இருந்த பகுதியில் வன்முறை வெடித்ததால் காவல்துறை, தீயணைப்பு வாகனங்கள் உள்ளே விரைந்து செல்ல முடியவில்லை. இரு பிரிவினரும் அதிகமாக உள்ள பகுதியில் இதன் காரணமாக அதிக சேதங்கள் ஏற்பட்டன. கலவரத்துக்கு ஹவாலா பணம் மூலம் நிதி வழங்கிய மூன்று பேரை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால் முழு விபரங்களையும் இங்கு தெரிவிக்க இயலாது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com