USA| 18 வருடங்களாக அண்டை வீட்டாரின் மின்கட்டணத்தையும் செலுத்திவந்த நபர்; ஷாக் கொடுத்த மீட்டர்பாக்ஸ்!

அமெரிக்காவின் Vacaville என்ற நகரத்தில் வசித்து வருபவர் கென் வில்சன் . இவர் தனக்கே தெரியாமல் 18 வருடங்களாக அண்டை வீட்டாரின் மின் கட்டணத்தையும் செலுத்தி வந்துள்ளது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
மீட்டர் ரீடிங்
மீட்டர் ரீடிங்கூகுள்
Published on

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கட்டப்படும் மின் கட்டணமானது சாமான்யமக்களுக்கு கழுத்தை நெரிக்கும் ஒரு செலவாகும். இதில் அடுத்த வீட்டு மின்கட்டணத்தையும் சேர்த்து கட்டி வருகிறோம் என்று தெரிந்தால், முதலில் நேராக அடுத்தவீட்டுற்கு சென்று, “ஏன்யா... நான் இத்தனை மாதமாக உங்க வீட்டு மின்தொகையையும் சேர்த்து கட்டுகிறேன். அது கூட உனக்கு தெரியலையா? அல்லது தெரிஞ்சும் தெரியாம இருக்கியா?” என்று அவரை ஒரு பிடி பிடித்துவிடுவோம். அதன் பிறகு மின்சார வாரியம் சென்று தகவல் கொடுப்போம்... இது நமது ஸ்டைல்...

அமெரிக்காவின் Vacaville என்ற நகரத்தில் வசித்து வருபவர் கென் வில்சன். இவர் தனக்கே தெரியாமல் 18 வருடங்களாக அண்டை வீட்டாரின் மின் கட்டணத்தையும் செலுத்தி வந்துள்ளது சமீபத்தில் தெரியவந்துள்ளது. இதற்காக மின் துறை அவரிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த கென்வில்சன் என்பவர் சமீபத்தில் ஒரு மின்சார சாதனத்தை வாங்கியுள்ளார். அந்த மின்சார சாதனத்தை உபயோகப்படுத்துவதால் மின்சாரம் அதிகரிக்குமா? என்பதை தெரிந்துக்கொள்ள அவர் தனது மீட்டரின் ரீடிங்கை கவனிக்கத் தொடங்கினார். அதன்படி அந்த மின் சாதனம் உபயோகத்தில் இருக்கும் பொழுது இருக்கும் ரீடிங்கையும் அது உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும் பொழுது உள்ள ரீடிங்கையும் கவனிக்கத்தொடங்கினார். அப்பொழுதுதான் அவருக்கு ஒரு செய்தி தெரியவந்துள்ளது.

தனது வீட்டிலிருக்கும் அனைத்து மின்சாதனங்களையும் அணைத்து வைத்தாலும் தொடர்ந்து தனது மீட்டரானது தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்.

இதை அடுத்து அவர் Pacific Gas & Electric Company (PG&E) ஐ தொடர்பு கொண்டு, மீட்டர் ரீடிங் ஓடுவது குறித்தும் அதை சரிபார்க்க ஒரு நபரை அனுப்பி வைக்கும்படியும் அவர்களிடம் முறையிட்டார். இதனை அடுத்து அந்நிறுவனம் கென்வில்சன் வீட்டு மின்மாற்றியை ஆய்வு செய்ததில் கிட்டத்தட்ட 18 வருடங்களாக அதாவது 2009 முதல் பக்கத்துவீட்டு மின்சார கனெக்‌ஷென் கென்வில்சன் வீட்டு மின்மாற்றியுடன் இணைப்பில் இருந்ததை உறுதி செய்தது.

மீட்டர் ரீடிங்
இலங்கையின் 9 ஆவது அதிபராக பதவியேற்றார் அநுரா குமார திஸநாயக!

இச்சம்பவத்திற்கு (PG&E) கென்வில்சனிடம் மன்னிப்பு கேட்டதுடன், கென்வில்சனின் நிலைமையை சரி செய்யவும் கடமைப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இது போன்ற சிக்கல்களைத் தவிர்க்க, மற்ற வாடிக்கையாளார்களிடம், தங்களது மீட்டரை சரிபார்க்குமாறு வலியுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com