ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான புதிய கட்டண விதிமுறையை அறிவித்த நொய்டா அரசு
கொரோனா நோயாளிகளை அழைத்துச்செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அதிக கட்டணம் வசுலிப்பதை தடுக்கும் வகையில் நொய்டா அரசு ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான புதிய கட்டணங்களை நிர்ணயித்துள்ளது.
இந்த அறிவிப்பு குறித்அதிகாரிகள் கூறும் போது, “ ஆக்சிஜன் அல்லாத ஆம்புலன்ஸ் வாகனங்கள் முதல் 10 கிலோமீட்டருக்கு 1000 ரூபாயையும், அடுத்து வாகனம் கடக்கும் ஒவ்வொரு கிலோமிட்டர் தூரத்திற்கும் 100 ரூபாயையும் கட்டணமாக பெற வேண்டும். ஆக்சிஜன் வசதி கொண்ட ஆம்புலன்ஸ் வாகனம் என்றால முதல் 10 கிலோ மீட்டருக்கு 1500 ரூபாயையும், அடுத்து கடக்கும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 100 ரூபாயையும் கட்டணமாக பெற வேண்டும்.
ஆம்புலன்ஸ் வெண்டிலேட்டர் வசதி கொண்டதாக இருக்குமானால் முதல் 10 கிலோமீட்டருக்கு 2500 ரூபாயையும் அடுத்து கடக்கும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கு 200 ரூபாயையும் கட்டணமாக பெற வேண்டும்” என்றனர்
முன்னதாக, நொய்டாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அழைத்துச்செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு கூட 20,000 முதல் 50,000 வரை கட்டணம் வசுலிப்பதாக உள்ளூர் வாசிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். அந்த புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் நொய்டா அரசு இவ்வாறான புதிய கட்டண விதிமுறைகளை விதித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 1188 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.