பறவை மோதியதால் தீப்பிடித்த போர் விமானத்தை சாதுர்யமாக செலுத்தி விமானப் படை விமானி தரையிறக்கினார்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானத்தளம் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாக்குவார் ரக விமானம் மீது பறவை மோதியது. இதில், விமானத்தின் ஒரு எஞ்சின் செயலிழந்தது. விமானத்தின் ஒரு இஞ்சின் செயலிழந்ததை தொடர்ந்து, உடனடியாக சுதாரித்துக்கொண்ட விமானி, விமானத்தின் கூடுதல் பெட்ரோல் டேங்குகளையும், சிறிய வெடிகுண்டையும் தனது கட்டுப்பாட்டு பொத்தானை அழுத்தி தனியாக கழன்று கீழே விழச் செய்தார்.
இந்தச் சம்பவம், பால்தேவ் நகரில் உள்ள விமானப்படை தளத்தின் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியை விமானம் கடக்கும் போது நிகழ்ந்துள்ளது. இதில், விமானத்தின் ஒருசில பொருட்கள் வீட்டின் மேற்கூரையின் மீதும், ஒருசில பொருட்கள் சாலையிலும் விழுந்தன.
இதைத்தொடர்ந்து, அந்தப் பகுதிக்கு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மூத்த விமானப்படை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அந்தப் பகுதியில் வேறு ஏதேனும் வெடிகுண்டுகள் விழுந்துள்ளதா என்பது குறித்து சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த விமானத்திலிருந்து பெட்ரோல் டேங்குகள் வெடித்த கிழே விழும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.