அமர்நாத் யாத்திரை தொடங்க இருப்பதையொட்டி ஜம்மு- காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தெற்கு காஷ்மீரில் அமர்நாத் குகையில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டுக்கான யாத்திரை நாளை தொடங்குகிறது. யாத்திரைக்கான முதல் குழு, ஜம்முவின் அடிவார முகாமில் இருந்து புறப்பட்டுச் செல்கிறது. இதற்காக அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு - ஸ்ரீநகர் இடையிலான நெடுஞ்சாலைகளில் கூடுதலாக வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி இந்த ஆண்டு யாத்திரையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.