அமராவதிக்குப் பதிலாக விசாகப்பட்டினத்தை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக்கலாம் என பாஸ்டன் நிறுவனம் ஆலோசனை வழங்கியுள்ளது.
அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும் விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகராகவும் கர்னூல் நீதித்துறை தலைநகராவும் உருவாக்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருந்தார். ஆனால், அமராவதியை தலைநகராக்கும் திட்டத்திற்காக நிலங்கள் வழங்கிய விவசாயிகளும் பொதுமக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
அமெரிக்காவின் ஆலோசனை நிறுவனமான பாஸ்டன் கன்சல்டன்சியுடன் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நடத்திய ஆலோசனையில், அமராவதியை விட துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தை தேர்ந்தெடுத்தால் ஆந்திர மாநிலம் வளர்ச்சியடையும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது. இதனால் ஆந்திர மாநிலத்துக்கு புதிய தலைநகரை தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.