''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி

''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
Published on

தமிழ் கற்க முயன்றாலும் என்னால் அந்த முயற்சியில் வெற்றிபெற முடியவில்லை என மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ஆம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றது முதல், 'மனதின் குரல்' எனப்படும் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இந்நிலையில், இந்த மாதத்திற்கான 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது ''தமிழ் கற்க வேண்டும் என நான் முயற்சி செய்தாலும் அந்த முயற்சியில் என்னால் வெற்றிபெற முடியவில்லை. இந்த உலகத்திலேயே மிகவும் அழகான மொழிகளில் தமிழும் ஒன்று. என்னால் தமிழ் சரியாக கற்க முடியவில்லை'' என்று பிரதமர் மோடி பேசினார்.

திருவண்ணாமலை மாவட்ட மக்களின் நீர் சேமிப்பு நடைமுறைகள் குறித்து புகழ்ந்து பேசிய பிரதமர், மதுரையில் முருகேசன் என்பவர் வாழைநாரில் அற்புதமான பொருட்களை உருவாக்கி வருவதாக குறிப்பிட்டார். தேர்வுக் காலம் என்பதால் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் நேரத்தை திறம்பட பயன்படுத்தி தேர்வுகளுக்கு சிறப்பாக தயாராக வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார். மழைக்காலம் தொடங்கும் முன் அனைத்து நீர் நிலைகளையும் சுத்தப்படுத்தி அவற்றின் மழை நீர் சேமிப்புத் திறனை அதிகரிக்க 100 நாள் இயக்கம் தொடங்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com