சிஆர்பிஎஃப் வீரரின் இறுதி சடங்கில் செல்ஃபி எடுத்த மத்திய அமைச்சர்

சிஆர்பிஎஃப் வீரரின் இறுதி சடங்கில் செல்ஃபி எடுத்த மத்திய அமைச்சர்
சிஆர்பிஎஃப் வீரரின் இறுதி சடங்கில் செல்ஃபி எடுத்த மத்திய அமைச்சர்
Published on

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த கேரளாவை சேர்ந்த வீரரின் இறுதி சடங்கில் மத்திய அமைச்சர் ஒருவர் செல்ஃபி எடுத்து வலைதளத்தில் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். அவர்களது உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்த தாக்குதலையடுத்து, பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகிவருகிறது. ராணுவத்திற்கு முழு அதிகாரத்தையும் வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

இதனிடையே இந்த தாக்குதலில் கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், திரிகைபேட்டா கிராமத்தைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற சிஆர்பிஎப் வீரரும் மரணமடைந்தார். அவரின் உடல் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு, நேற்று சொந்தகிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி சடங்கில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் அல்போன்ஸ் கலந்து கொண்டார். அப்போது அமைச்சர் அல்போன்ஸ் வீரரின் உடல் முன்பு நின்று செல்ஃபி எடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தை அவர் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com