விமானப் பணிப்பெண் உட்பட 3 பேரை கொன்ற ’டிக் டாக்’ ஜானி தாதா தற்கொலை!

விமானப் பணிப்பெண் உட்பட 3 பேரை கொன்ற ’டிக் டாக்’ ஜானி தாதா தற்கொலை!
விமானப் பணிப்பெண் உட்பட 3 பேரை கொன்ற ’டிக் டாக்’ ஜானி தாதா தற்கொலை!
Published on

விமானப் பணிப்பெண் உட்பட 3 பேரை கொலை செய்ததாக, போலீசாரால் தேடப்பட்டு வந்த, ’டிக் டாக்’ ஜானி தாதா, தன்னைத் தானே சுட்டுக்கொன்று தற்கொலை செய்துகொண்டார். 

உத்திரப்பிரதேசம் பிஜ்னார் பகுதியில் கடந்த மாதம் 5 நாட்களுக்குள், 3 கொலைகள் அடுத்தடுத்து நடந்தன. கொலை குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 3 கொலைகளையும் செய்தது ஒரே நபர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னார் பகுதியைச் சேர்ந்தவர் அஷ்வினி குமார். தான் ஒரு வில்லன் என்று கூறிகொண்டு ஜானி தாதா என்ற பெயரில் டிக் டாக்கில் வீடியோ வெளியிடுவது இவரது வழக்கம். சமூக வலைதளங்களில் தன்னை வில்லன் என்றே சொல்லிக்கொண்ட இவர், போதைக்கு அடிமையானவர். 

பாஜக பிரமுகர் பி.எஸ்.கஷ்யப்பின் மகன் பூஷன் என்ற ராகுல் (24), மருமகன் கிருஷ்ணா என்ற லாலா (25) ஆகியோருடன் ஒன்றாக மது அருந்திய அஸ்வினி குமார் அவர்களை திடீரென சுட்டுக்கொன்றுவிட்டு தலைமறைவானார். அடுத்து விமானப் பணிப்பெண் நிகிதா சர்மா என்பவரை சுட்டுக்கொன்றார். 

(நிகிதா, அஸ்வினி குமார்)

துபாயில் வேலைபார்த்து வந்த நிகிதா, தன் திருமணத்துக்காக பிஜ்னாருக்கு சமீபத்தில்தான் வந்துள்ளார். அதைத் தெரிந்து கொண்டு கொலை செய்துள்ளார் அஷ்வினி குமார். இதுகுறித்து நிகிதாவின் உறவினர்கள் கூறும்போது, 2002ம் ஆண்டு அஷ்வினி குமாருக்கும் நிகிதாவுக்கும் இடையே பிரச்னை இருந்தது. அதற்குப் பின் நிகிதா துபாய் சென்றுவிட்டார். தற்போது தான் திரும்பினார் என்றனர்.

நிகிதாவின் கொலைக்கான காரணம் குறித்து போலீசாருக்கு துப்பு கிடைத்தாலும், மற்ற இரு கொலைகளையும்  ஏன் செய்தார் என போலீசாருக்கு புரியவில்லை. போதைக்கு அடிமையானதால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

எந்த குற்ற வழக்குமே இல்லாத ஒருவர், திடீரென 3 கொலைகளை அடுத்தடுத்து செய்தது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தது. தலைமறைவான அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் தன்னைத் தேடி வருவதை அறிந்த அஸ்வினி குமார், தன்னைத் தானே நேற்றிரவு சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள் ளனர்.

பிஜோனர் எஸ்.பி, சஞ்சிவ் தியாகி கூறும்போது, ‘பதாபூர் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தில் சோதனையிட்டுக் கொண்டிருந் தோம். அப்போது டிரைவர் இருக்கையின் பின்பக்கம் முகத்தை கர்சீபால் மூடியபடி ஒருவர் இருந்தார். அதை காவலர் ஒருவர் விலக்கச் சொன்னார். ஆனால், திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். அவர், ஜானி தாதா என்பது பின்னர்தான் எங்களுக்குத் தெரிய வந்தது’’ என்றார்.

அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ‘இந்த உலகத்தை விட்டுச் செல்கிறேன்’ என்று ஏற்கனவே குறிப்பிட்டிருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com