அனைத்து சிம் கார்டுகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரசின் சில சலுகைகளையும், மானியங்களையும் பெறுவதற்கு தான் ஆதார் எண் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அரசு முதலில் தெரிவித்தது. ஆனால் பின்னர் ஆதார் எண் கேஸ் மானியம் பெறுவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு ஆதார் எண் கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிம் கார்டுகளுக்கும் தற்போது ஆதார் எண் இணைப்பு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் சிம் கார்டினை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் அது செயலிழக்க செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லோக்நிதி பவுண்டேசன் வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.