‘பயங்கரவாதிகள் மதரசாவில் உருவாகிறார்கள்..’ பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு..

‘பயங்கரவாதிகள் மதரசாவில் உருவாகிறார்கள்..’ பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு..
‘பயங்கரவாதிகள் மதரசாவில் உருவாகிறார்கள்..’ பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு..
Published on
‘பயங்கரவாதிகள் அனைவரும் மதரசாக்களில் வளர்ந்தவர்கள்’ என்ற மத்தியப் பிரதேச மாநில அமைச்சரின் பேச்சு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநில கலாச்சாரத் துறை அமைச்சர் உஷா தாக்கூர் கூறுகையில், ‘’நாட்டின் அனைத்து அடிப்படைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளும் மதரசாக்களில் வளர்ந்தவர்கள். எல்லா மதங்களையும் சேர்ந்த மாணவர்களுக்கு கூட்டாக ஒரே கல்வி வழங்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். அசாம் மாநிலம் இதைச் செய்திருக்கிறது. மதத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி வெறித்தனத்தை அதிகரித்து வெறுப்பை பரப்புகிறது.
 
மதரசாக்கள் என்ன கலாச்சாரம் கற்பிக்கிறார்கள்? நீங்கள் இந்த நாட்டின் குடிமகனாக இருந்தால், அனைத்து அடிப்படைவாதிகளும் பயங்கரவாதிகளும் மதரசாக்களில் வளர்ந்திருப்பதை நீங்கள் காணலாம். ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாற்றப்பட்டது இப்படித்தான்.
 
மதக் கல்வியை விரும்புவோர் அதை தங்கள் சொந்த செலவில் பெறலாம். ஏனெனில் அரசியலமைப்பு அவர்களுக்கு இந்த உரிமையை அளிக்கிறது. மதரசாக்களுக்கான அரசாங்கத்தின் நிதி உதவி நிறுத்தப்பட வேண்டும். வக்ஃப் வாரியம் பொருளாதார ரீதியாக உலகின் வலிமையான அமைப்பாகும், மேலும் இது மதரசாக்களுக்கான நிதியைக் கவனிக்கும்” என்று அவர் கூறினார்.
அஸ்ஸாமில், அரசு நடத்தும் அனைத்து மதரசாக்களும் மூடப்பட்டு அவை அனைவரும் படிக்கும் அரசு பள்ளிகளாக மாற்றப்படும் என அஸ்ஸாம் கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com