அனைத்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளே எனது பலம் மற்றும் சக்தி - பிரதமர் மோடி பேச்சு

அனைத்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளே எனது பலம் மற்றும் சக்தி - பிரதமர் மோடி பேச்சு
அனைத்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளே எனது பலம் மற்றும் சக்தி - பிரதமர் மோடி பேச்சு
Published on

அனைத்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளே தனது பலமும், ஊக்க சக்தியுமாக உள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் நலிவடைந்த பழங்குடியினர் வகுப்புகளின் குறிப்பிட்ட 4 பிரிவினருக்கு பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்ட மையங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பின்னர் மகளிர் சுய உதவிக்குழுவினரின் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தனது பிறந்தநாளில் தாயிடம் ஆசிர்வாதம் வாங்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்தார். ஆனால், மத்தியப் பிரதேசத்தில் லட்சக்கணக்கான தாய்மார்கள் தன்னை ஆசிர்வதிப்பது கண்டு தனது தாய் மனநிறைவு அடைவார் எனக் குறிப்பிட்டார்.

தற்போதைய புதிய இந்தியாவில், பஞ்சாயத்தில் இருந்து குடியரசுத்தலைவர் மாளிகை வரை பெண் சக்தியின் கொடிபறக்கிறது. பெண்களுக்கு இதுவரை அடைபட்ட கதவுகளை அனைத்து வகைகளிலும் திறந்து வைத்திருக்கிறோம். அதனால்தான் பள்ளி ஆசிரியர் முதல் தொடங்கி கமாண்டோவாகவும் மட்டுமின்றி குடியரசுத்தலைவர் மாளிகை வரை பெண்களின் கொடி பறக்கிறது. தேசத்திற்காக பெண்கள் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி பெருமை சேர்க்கிறார்கள்.

மேலும் 9 கோடிக்கும் அதிகமான உஜ்வாலா எரிவாயு இணைப்புத்திட்டம், 11 கோடிக்கும் அதிகமான கழிவறைகள் உள்ளிட்ட திட்டங்களால் பெண்களின் வாழ்க்கை எளிதாக்கப்பட்டிருக்கிறது என்றும், முத்ரா திட்டத்தின் கீழ், இதுவரை 19 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com