சைக்கிளில் சொந்த மாநிலத்திற்குப் புறப்பட்ட தம்பதி விபத்தில் பலி - தீவிர சிகிச்சையில் பிள்ளைகள்
ஊரடங்கு காரணமாக வெளிமாநிலத்திலிருந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மிதிவண்டியில் பயணித்தவர் விபத்தில் உயிரிழந்தார்.
உத்திரப் பிரதேச மாநிலம் பெமேதராவை சேர்ந்தவர் கிருஷ்ணா சகு. இவரது மனைவி பிரமிளா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். உத்திர பிரதேச மாநிலம் சத்தீஸ்கரில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்த கிருஷ்ணா, ஊரடங்கு உத்தரவின் காரணமாக வேலையின்றி தவித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வறுமையைச் சமாளிக்க இயலாததால் மிதி வண்டியிலேயே குடும்பத்துடன் அவரது சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஆனால் லக்னோவின் ஷாகித் பகுதிக்கு அருகில் கிருஷ்ணா வந்து கொண்டிருந்த போது, அவரது மிதி வண்டியில் விபத்தில் சிக்கியது. இதில் கிருஷ்ணாவும் அவரது மனைவியும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த அவர்களின் குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைக் கிருஷ்ணாவின் சகோதரர் கவனித்து வருகிறார்.
இந்தச் சம்பவம் குறித்து கிருஷ்ணாவின் உறவினர் மோகன் கூறும் போது “ கிருஷ்ணா சொல்ல முடியாத வறுமையிலிருந்தார். அவனிடம் பணமும் இல்லை, உணவும் இல்லை. அதனால் அவன் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் விவசாயம் செய்தாவது பிழைத்துக் கொள்ளலாம் என நினைத்தார்.
சத்தீஸ்கரில் அவர்கள் வசித்த வீடு மிக மிகச் சிறியது. அவனுடைய மாதச் சம்பளம் வெறும் 800 ரூபாய்தான். கிருஷ்ணாவின் வீட்டிற்கு அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் ஊரடங்கால் அவர்கள் சந்தித்து வரும் பிரச்னைகளை அதிகாரிகளிடம் கூறி உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் கோரிக்கையை ஏற்றதோடு சரி, பிறகு அந்தப்பக்கமே வரவில்லை. கிருஷ்ணா ரயில் மூலம் சொந்த ஊர் செல்வதற்குத் தனது பெயரைப் பதிவு செய்ய முயன்றுள்ளார் . ஆனால் அவரைக் காவல் துறைய்னர் துரத்தியுள்ளனர்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.