கொரோனா தொற்று காரணமாக சவுதி அரேபியா மக்கள் மட்டுமே இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையில் கலந்துகொள்ள அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கான அனைத்து விண்ணப்பங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஹஜ் குழு அறிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியின் காரணமாக சவுதி அரேபியாவின் உள்நாட்டு மக்கள் மட்டுமே ஹஜ் யாத்திரையில் கலந்துகொள்ள அனுமதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. "எனவே ஹஜ் -2021 ஆண்டிற்கான அனைத்து விண்ணப்பங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று இந்திய ஹஜ் கமிட்டியால் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று இந்தியாவின் ஹஜ் கமிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி மக்ஸூத் அகமது கான் அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டும் கொரோனா தொற்று காரணமாக ஹஜ் பயணத்துக்கு இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு மக்கள் அனுமதிக்கப்படவில்லை.