ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலக பெண் அதிருப்தி எம்எல்ஏ முடிவு

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலக பெண் அதிருப்தி எம்எல்ஏ முடிவு
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலக பெண் அதிருப்தி எம்எல்ஏ முடிவு
Published on

ஆம் ஆத்மி கட்சி அதிருப்தி பெண் எம்எல்ஏவான அல்கா லம்பா அக்கட்சியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளார். அத்துடன் வரும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிடவும் முடிவு செய்துள்ளார்.

டெல்லி சாந்தினி சவுக் தொகுதி எம்எல்ஏ அல்கா லம்பா. ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏவான இவர், அக்கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமான அதிருப்தியில் இருந்து வந்தார். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலக அல்கா லம்பா முடிவெடுத்துள்ளார். அத்துடன் வரும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிடவும் முடிவெடுத்துள்ளார்.

தொகுதி மக்களுடன் ஆலோசித்த பின்னரே இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறிய அவர், பல இடங்களில் கட்சி தன்னை அவமரியாதையாக நடத்தியாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com