“நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் வரிசையில் அகிலேஷ் யாதவ்...

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே ஒரே நாடு ஒரே கோரிக்கை என உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
  "நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்" - அகிலேஷ் யாதவ்
"நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்" - அகிலேஷ் யாதவ்pt web
Published on

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே ஒரே நாடு ஒரே கோரிக்கை என உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் வலுத்துவரும் சூழலில், நீட்டுக்கு எதிராக ராகுல்காந்தி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் அகிலேஷ் யாதவ்வும் கருத்து தெரிவித்துள்ளார்.

  "நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்" - அகிலேஷ் யாதவ்

 NEET |  AkhileshYadav
"நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்" - அகிலேஷ் யாதவ் NEET | AkhileshYadav

டெல்லி, தமிழ்நாடு, பீகார், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நீட் தேர்வு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இந்த வருட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மறுதேர்வு நடத்த வேண்டும் என பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் பல்வேறு வழக்குகளும் நடந்து வருகிறது.

  "நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்" - அகிலேஷ் யாதவ்
+2-ல் 2 பாடங்களில் தோல்வி; ஆனால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதுஎப்படி? வைரலாகும் மார்க்‌ஷீட்!

இந்நிலையில்தான், அகிலேஷ் யாதவ் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளார். எதிர்க்கட்சியான INDIA கூட்டணியின் பல்வேறு தலைவர்ல்கள் இதே கருத்தை தெரிவித்துள்ள நிலையில், அதே கருத்தை அகிலேஷ் யாதவ்வும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com